• May 09 2024

இத்தாலியில் வேலை செய்து பணம் அனுப்பிய கணவன் - காதலனுடன் கனடாவுக்குக் கப்பலேறிய மனைவி! - யாழில் சம்பவம்

Chithra / Dec 14th 2022, 11:22 am
image

Advertisement

இத்தாலியில் கணவன் வேலை செய்து யாழில் உள்ள மனைவிக்கு காசை அனுப்பிக் கொண்டு இருந்த நிலையில் மனைவி காதலனுடன் கனடாவுக்கு கப்பலேறிய சம்பவம் ஒன்று யாழில் இடம்பெற்றுள்ளது.

கனடாவுக்கு சட்டவிரோதமாக செல்ல முயன்ற 300 இற்கு அதிகமான இலங்கையர்கள், நடுக்கடலில் தத்தளித்த நிலையில் மீட்கப்பட்டு வியட்நாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இவ்வாறு சட்டவிரோதமாக கனடா புறப்பட்டு அகப்பட்டுக் கொண்டவர்களில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த குடும்ப பெண் ஒருவர், கணவர் வெளிநாட்டில் இருக்க காதலனுடன் கப்பலேறியுள்ளார்.

குறித்த பெண்ணின் கணவர் இத்தாலியில் வசித்துவருவதாக கூறப்படுகின்றது. இந் நிலையில் மனைவி வேறொருவருடன் கனடாவுக்கு கப்பலேறியுள்ளார்.

அதேநேரம் கணவர் மனைவியை தன்னுடன் அழைக்க ஸ்பொன்சர் எடுக்க தயாரான நிலையில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் கணவன் சமூக ஊடகங்கள் ஊடாக தகவலைத் தெரியப்படுத்தியுள்ளார். 

மேலும் கணவனிடம் பெருந்தொகை பணத்தை ஏமாற்றிய குறித்த பெண்ணுக்கு எதிராக யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், பத்திரிகை ஒன்றில் காணவில்லை என விளம்பரமும் பிரசுரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இத்தாலியில் வேலை செய்து பணம் அனுப்பிய கணவன் - காதலனுடன் கனடாவுக்குக் கப்பலேறிய மனைவி - யாழில் சம்பவம் இத்தாலியில் கணவன் வேலை செய்து யாழில் உள்ள மனைவிக்கு காசை அனுப்பிக் கொண்டு இருந்த நிலையில் மனைவி காதலனுடன் கனடாவுக்கு கப்பலேறிய சம்பவம் ஒன்று யாழில் இடம்பெற்றுள்ளது.கனடாவுக்கு சட்டவிரோதமாக செல்ல முயன்ற 300 இற்கு அதிகமான இலங்கையர்கள், நடுக்கடலில் தத்தளித்த நிலையில் மீட்கப்பட்டு வியட்நாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில் இவ்வாறு சட்டவிரோதமாக கனடா புறப்பட்டு அகப்பட்டுக் கொண்டவர்களில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த குடும்ப பெண் ஒருவர், கணவர் வெளிநாட்டில் இருக்க காதலனுடன் கப்பலேறியுள்ளார்.குறித்த பெண்ணின் கணவர் இத்தாலியில் வசித்துவருவதாக கூறப்படுகின்றது. இந் நிலையில் மனைவி வேறொருவருடன் கனடாவுக்கு கப்பலேறியுள்ளார்.அதேநேரம் கணவர் மனைவியை தன்னுடன் அழைக்க ஸ்பொன்சர் எடுக்க தயாரான நிலையில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் கணவன் சமூக ஊடகங்கள் ஊடாக தகவலைத் தெரியப்படுத்தியுள்ளார். மேலும் கணவனிடம் பெருந்தொகை பணத்தை ஏமாற்றிய குறித்த பெண்ணுக்கு எதிராக யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், பத்திரிகை ஒன்றில் காணவில்லை என விளம்பரமும் பிரசுரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement