• May 20 2024

"ஜெயிலர்" திரைப்படத்தில் ரஜினியின் மனைவி?

harsha / Dec 14th 2022, 11:24 am
image

Advertisement

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ நேற்று வெளியானது.

 இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்தும் இந்த படத்தில் நடித்துள்ளாரா? என்ற கேள்வியை எழுப்பி வருகின்றனர்.



ரஜினிகாந்த் தனது 72-வது பிறந்த நாளை  கொண்டாடிய நிலையில் அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் அவர் நடித்து வரும் ‘ஜெயிலர்’ படத்தின் வீடியோ வெளியானது.  

  வீடியோவை உற்றுப் பார்த்த சில ரசிகர்கள் இந்த வீடியோவில் ஒரு புகைப்படம் இருப்பதை பார்த்துள்ளனர். அந்த புகைப்படத்தில் ரஜினி தனது மனைவியுடன் லதாவுடன் இருப்பது போன்று காட்சி உள்ளது.
இதனை அடுத்து இந்த படத்தின் பிளாஷ்பேக் காட்சியில் ரஜினியின் மனைவி லதா நடித்துள்ளாரா? என்ற கேள்வியை எழுப்பி உள்ளனர்.



ஆனால் இதுகுறித்து படக்குழுவினர்களிடம் இருந்து எந்தவித தகவலும் வெளிவரவில்லை என்பதால் படம் வெளிவந்தால் தான் லதா இந்த படத்தில் நடித்துள்ளாரா? என்பது தெரிய வரும்.


நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகி வரும் இந்த படத்தில் ரஜினிகாந்த், சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், விநாயகன், யோகிபாபு, வசந்த் ரவி, அறந்தாங்கி நிஷா, பருத்திவீரன் சரவணன் உள்பட பலர் நடித்து வருகின்றனர். இந்த படம் அடுத்த ஆண்டு தமிழ் புத்தாண்டு தினத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

"ஜெயிலர்" திரைப்படத்தில் ரஜினியின் மனைவி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ நேற்று வெளியானது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்தும் இந்த படத்தில் நடித்துள்ளாரா என்ற கேள்வியை எழுப்பி வருகின்றனர்.ரஜினிகாந்த் தனது 72-வது பிறந்த நாளை  கொண்டாடிய நிலையில் அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் அவர் நடித்து வரும் ‘ஜெயிலர்’ படத்தின் வீடியோ வெளியானது.    வீடியோவை உற்றுப் பார்த்த சில ரசிகர்கள் இந்த வீடியோவில் ஒரு புகைப்படம் இருப்பதை பார்த்துள்ளனர். அந்த புகைப்படத்தில் ரஜினி தனது மனைவியுடன் லதாவுடன் இருப்பது போன்று காட்சி உள்ளது. இதனை அடுத்து இந்த படத்தின் பிளாஷ்பேக் காட்சியில் ரஜினியின் மனைவி லதா நடித்துள்ளாரா என்ற கேள்வியை எழுப்பி உள்ளனர்.ஆனால் இதுகுறித்து படக்குழுவினர்களிடம் இருந்து எந்தவித தகவலும் வெளிவரவில்லை என்பதால் படம் வெளிவந்தால் தான் லதா இந்த படத்தில் நடித்துள்ளாரா என்பது தெரிய வரும்.நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகி வரும் இந்த படத்தில் ரஜினிகாந்த், சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், விநாயகன், யோகிபாபு, வசந்த் ரவி, அறந்தாங்கி நிஷா, பருத்திவீரன் சரவணன் உள்பட பலர் நடித்து வருகின்றனர். இந்த படம் அடுத்த ஆண்டு தமிழ் புத்தாண்டு தினத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Advertisement

Advertisement

Advertisement