• Oct 25 2026

உயிருக்குப் போராடிய காட்டு யானை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

Ziya / Oct 24th 2026, 2:51 pm
image

சம்மாந்துறை சேகப்பற்று வயல் நிலத்தில் நோய்வாய்ப்பட்ட நிலையில் காணப்பட்ட காட்டு யானைக்கு வனவிலங்கு வைத்தியக் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்த போதிலும் பலனளிக்கவில்லை.


அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சேகப்பற்று வயல் பகுதியில் இரண்டு நாட்களாக நோய்வாய்ப்பட்டு கிடந்த காட்டு யானை தீவிர மருத்துவச் சிகிச்சைகள் வழங்கப்பட்ட போதிலும் இன்று (24) சனிக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.


இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார், வனவிலங்கு அதிகாரிகளுடன் இணைந்து முன்னெடுத்து வருகின்றனர். இதேவேளை இறந்த யானையின் உடற்கூற்று பரிசோதனைக்கான   நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன.


சுமார் 25 முதல் 30 வயதுக்கு இடைப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ள இந்த யானையைக் காப்பாற்றுவதற்குப் பல்வேறு தீவிர மருத்துவ முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், அதன் உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.


கடந்த புதன்கிழமை (21) நோய்வாய்ப்பட்டு கிடந்த நிலையில் கண்டறியப்பட்ட குறித்த ஆண் யானையைக் காப்பாற்றுவதற்காக அம்பாறை மாவட்ட கால்நடை மருத்துவக் குழுவினர் வனவிலங்கு அதிகாரிகளுடன் இணைந்து தொடர்ச்சியான அவசர சிகிச்சைகளை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


உயிருக்குப் போராடிய காட்டு யானை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு சம்மாந்துறை சேகப்பற்று வயல் நிலத்தில் நோய்வாய்ப்பட்ட நிலையில் காணப்பட்ட காட்டு யானைக்கு வனவிலங்கு வைத்தியக் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்த போதிலும் பலனளிக்கவில்லை.அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சேகப்பற்று வயல் பகுதியில் இரண்டு நாட்களாக நோய்வாய்ப்பட்டு கிடந்த காட்டு யானை தீவிர மருத்துவச் சிகிச்சைகள் வழங்கப்பட்ட போதிலும் இன்று (24) சனிக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார், வனவிலங்கு அதிகாரிகளுடன் இணைந்து முன்னெடுத்து வருகின்றனர். இதேவேளை இறந்த யானையின் உடற்கூற்று பரிசோதனைக்கான   நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன.சுமார் 25 முதல் 30 வயதுக்கு இடைப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ள இந்த யானையைக் காப்பாற்றுவதற்குப் பல்வேறு தீவிர மருத்துவ முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், அதன் உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.கடந்த புதன்கிழமை (21) நோய்வாய்ப்பட்டு கிடந்த நிலையில் கண்டறியப்பட்ட குறித்த ஆண் யானையைக் காப்பாற்றுவதற்காக அம்பாறை மாவட்ட கால்நடை மருத்துவக் குழுவினர் வனவிலங்கு அதிகாரிகளுடன் இணைந்து தொடர்ச்சியான அவசர சிகிச்சைகளை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement