மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள மல்லிகைத்தீவு கிராமத்திற்குள் இன்று(31) அதிகாலை உட்புகுந்த காட்டு யானைகள் அட்டகாசத்தில் ஈடுபட்டு அழிவுகளை ஏற்படுத்தியுள்ளது.
இதன்போது பயன்தரும் வாழை மரங்களை துவம்சம் செய்துள்ளதாக கிராம மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
தொடர்ச்சியாக தமது கிராமத்திற்குள் காட்டு யானைகள் புகுந்து சேதம் விளைவிப்பதால் தமது பயிர்கள் சேதமடைவதாகவும், இரவு வேளைகளில் வீட்டில் உறங்குவதற்கும் அச்சமாக உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
இது விடயத்தில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு யானை பாதுகாப்புவேலி அமைத்துத்தர வேண்டுமென மூதூர் -மல்லிகைத்தீவு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
மூதூரில் காட்டு யானைகளின் அட்டகாசம்- கிராம மக்கள் கவலை. மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள மல்லிகைத்தீவு கிராமத்திற்குள் இன்று(31) அதிகாலை உட்புகுந்த காட்டு யானைகள் அட்டகாசத்தில் ஈடுபட்டு அழிவுகளை ஏற்படுத்தியுள்ளது.இதன்போது பயன்தரும் வாழை மரங்களை துவம்சம் செய்துள்ளதாக கிராம மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.தொடர்ச்சியாக தமது கிராமத்திற்குள் காட்டு யானைகள் புகுந்து சேதம் விளைவிப்பதால் தமது பயிர்கள் சேதமடைவதாகவும், இரவு வேளைகளில் வீட்டில் உறங்குவதற்கும் அச்சமாக உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.இது விடயத்தில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு யானை பாதுகாப்புவேலி அமைத்துத்தர வேண்டுமென மூதூர் -மல்லிகைத்தீவு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.