• Nov 28 2024

ஆசியாவில் அபிவிருத்தி அடைந்த நாடாக இலங்கையை மேம்படுத்துவேன் - தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்ட நாமல் கருத்து

Chithra / Sep 2nd 2024, 12:44 pm
image

 

தேர்தல் மேடைகளில் பிரதான பிரச்சாரமாக பயன்படுத்தப்படும் " ஊழல், மோசடி ஒழிப்பு" கோசத்தை 3 ஆண்டுக்குள் முடிவுக்கு கொண்டு வருவோம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

சர்வமத வழிபாடுகளுடன்  "நாமல் இலக்கு - உங்களுக்காக முன்னேற்றகரமான நாடு" என்ற தொனிப்பொருளின் கீழ் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்‌ஷவின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று திங்கட்கிழமை (2) காலை வெளியிடப்பட்டுள்ளது.

இதன் பின்னர் உரையாற்றுகையிலேயே நாமல் ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்தார்.

தேர்தல் மேடைகளில் பிரதான பிரச்சாரமாக பயன்படுத்தப்படும் " ஊழல் ,மோசடி ஒழிப்பு" கோசத்தை 3 ஆண்டுக்குள் முடிவுக்கு கொண்டு வருவோம். நாட்டின் ஒற்றையாட்சி அரசியலமைப்பும் பெளத்த சாசனமும் பாதுகாக்கப்படும்.

பொருளாதார மேம்பாட்டுக்கான பொறுப்பை நாங்கள் ஏற்போம்.  ஆட்சியமைத்து 6 மாதங்களுக்குள் முழு அரசசேவை கட்டமைப்பையும் டிஜிட்டல் மயப்படுத்துவோம்.

வரிக் கொள்கையில் நேரில் வரி முறைமையை செயற்படுத்துவோம். 10 ஆண்டுக்குள் நேர் மற்றும் நேரில் முறைமை ஊடாக 20 இலட்சம் தொழில் வாய்ப்புக்களை தோற்றுவிப்போம்.

எதிர்வரும் 10 ஆண்டுகள் வலுச் சக்தியை ஏற்றுமதி செய்யும் நாடாக இலங்கையின் சக்தி வலுத்துறையை மேம்படுத்துவோம். 

இளம் தலைமுறையினரை உள்ளடக்கிய வகையில் ஆசியாவில் அபிவிருத்தி அடைந்த நாடாக இலங்கையை மேம்படுத்துவேன் என்று நாமல் ராஜபக்‌ஷ மேலும் தெரிவித்தார்.

ஆசியாவில் அபிவிருத்தி அடைந்த நாடாக இலங்கையை மேம்படுத்துவேன் - தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்ட நாமல் கருத்து  தேர்தல் மேடைகளில் பிரதான பிரச்சாரமாக பயன்படுத்தப்படும் " ஊழல், மோசடி ஒழிப்பு" கோசத்தை 3 ஆண்டுக்குள் முடிவுக்கு கொண்டு வருவோம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.சர்வமத வழிபாடுகளுடன்  "நாமல் இலக்கு - உங்களுக்காக முன்னேற்றகரமான நாடு" என்ற தொனிப்பொருளின் கீழ் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்‌ஷவின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று திங்கட்கிழமை (2) காலை வெளியிடப்பட்டுள்ளது.இதன் பின்னர் உரையாற்றுகையிலேயே நாமல் ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்தார்.தேர்தல் மேடைகளில் பிரதான பிரச்சாரமாக பயன்படுத்தப்படும் " ஊழல் ,மோசடி ஒழிப்பு" கோசத்தை 3 ஆண்டுக்குள் முடிவுக்கு கொண்டு வருவோம். நாட்டின் ஒற்றையாட்சி அரசியலமைப்பும் பெளத்த சாசனமும் பாதுகாக்கப்படும்.பொருளாதார மேம்பாட்டுக்கான பொறுப்பை நாங்கள் ஏற்போம்.  ஆட்சியமைத்து 6 மாதங்களுக்குள் முழு அரசசேவை கட்டமைப்பையும் டிஜிட்டல் மயப்படுத்துவோம்.வரிக் கொள்கையில் நேரில் வரி முறைமையை செயற்படுத்துவோம். 10 ஆண்டுக்குள் நேர் மற்றும் நேரில் முறைமை ஊடாக 20 இலட்சம் தொழில் வாய்ப்புக்களை தோற்றுவிப்போம்.எதிர்வரும் 10 ஆண்டுகள் வலுச் சக்தியை ஏற்றுமதி செய்யும் நாடாக இலங்கையின் சக்தி வலுத்துறையை மேம்படுத்துவோம். இளம் தலைமுறையினரை உள்ளடக்கிய வகையில் ஆசியாவில் அபிவிருத்தி அடைந்த நாடாக இலங்கையை மேம்படுத்துவேன் என்று நாமல் ராஜபக்‌ஷ மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement