• May 26 2025

திருகோணமலையில் எனது விவசாய காணியும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன - விவசாய காணிகளை விடுவிக்குமாறு அரசாங்கத்திடம் கோரும் குகதாசன் எம்.பி

Thansita / May 25th 2025, 8:53 pm
image

அரசாங்கத்திற்கு இந்த நாட்டிற்கு ஒரு வருடத்திற்கு ஐந்து இலட்சம் மெற்றிக்தொன் அரிசி உற்பத்தி பாதிக்கப்படுகிறது 

எனவே நாட்டினுடைய நன்மை கருதியும் விவசாயிகளின் நன்மை கருதியும் அரசாங்கம் காணிகளை விடுவிப்பதற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கதிரவேலு சண்முகம் குகதாசன் தெரிவித்தார். 

திருகோணமலையில் இன்று (25)மாலை இடம் பெற்ற காணி அபகரிப்பு தொடர்பிலான இரு குறுந் திரைப்படங்கள் வெளியீட்டு வைபவத்தில் கலந்து கொண்டதன் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். 

தொடர்ந்தும் கூறுகையில் 

இது தொடர்பாக கடந்த வெள்ளிக் கிழமை நாடாளுமன்றத்தில் பிரதமர் தலைமையில் கலந்துரையாடல் இடம் பெற்றிருந்தது. நானும் கலந்து கொண்டேன் இதில் வட மாகாணத்தை மையப்படுத்தி கலந்துரையாடல் இடம் பெற்றாலும் கிழக்கு மாகாணத்தை பற்றி பேசப்படவில்லை  

இருந்த போதிலும் திருகோணமலை மாவட்ட விவசாயிகளின் காணி பிரச்சினைகள் தொடர்பில் அறிக்கைகளை சமர்ப்பித்துள்ளேன் என்றும் தானும் ஒரு விவசாயி என்ற அடிப்படையில் எனது வயல் நிலங்களும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன 

இதில் கூடிய கவனம் செலுத்தி மக்கள் காணி பிரச்சினைகளை தீர்க்க இயலுமான முயற்சிகளை மேற்கொள்வேன் .316000 ஏக்கர் காணிகளை விடுவித்து விவசாயிகளின் துன்பத்தை துடைக்க வேண்டும் மேலும் ஐந்து இலட்ச மெற்றிக் தொன் நெல்  உற்பத்தியை அதிகரிக்க முயற்சிக்க வேண்டும் என அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கிறேன் என்றார்.

திருகோணமலையில் எனது விவசாய காணியும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன - விவசாய காணிகளை விடுவிக்குமாறு அரசாங்கத்திடம் கோரும் குகதாசன் எம்.பி அரசாங்கத்திற்கு இந்த நாட்டிற்கு ஒரு வருடத்திற்கு ஐந்து இலட்சம் மெற்றிக்தொன் அரிசி உற்பத்தி பாதிக்கப்படுகிறது எனவே நாட்டினுடைய நன்மை கருதியும் விவசாயிகளின் நன்மை கருதியும் அரசாங்கம் காணிகளை விடுவிப்பதற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கதிரவேலு சண்முகம் குகதாசன் தெரிவித்தார். திருகோணமலையில் இன்று (25)மாலை இடம் பெற்ற காணி அபகரிப்பு தொடர்பிலான இரு குறுந் திரைப்படங்கள் வெளியீட்டு வைபவத்தில் கலந்து கொண்டதன் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் கூறுகையில் இது தொடர்பாக கடந்த வெள்ளிக் கிழமை நாடாளுமன்றத்தில் பிரதமர் தலைமையில் கலந்துரையாடல் இடம் பெற்றிருந்தது. நானும் கலந்து கொண்டேன் இதில் வட மாகாணத்தை மையப்படுத்தி கலந்துரையாடல் இடம் பெற்றாலும் கிழக்கு மாகாணத்தை பற்றி பேசப்படவில்லை  இருந்த போதிலும் திருகோணமலை மாவட்ட விவசாயிகளின் காணி பிரச்சினைகள் தொடர்பில் அறிக்கைகளை சமர்ப்பித்துள்ளேன் என்றும் தானும் ஒரு விவசாயி என்ற அடிப்படையில் எனது வயல் நிலங்களும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன இதில் கூடிய கவனம் செலுத்தி மக்கள் காணி பிரச்சினைகளை தீர்க்க இயலுமான முயற்சிகளை மேற்கொள்வேன் .316000 ஏக்கர் காணிகளை விடுவித்து விவசாயிகளின் துன்பத்தை துடைக்க வேண்டும் மேலும் ஐந்து இலட்ச மெற்றிக் தொன் நெல்  உற்பத்தியை அதிகரிக்க முயற்சிக்க வேண்டும் என அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கிறேன் என்றார்.

Advertisement

Advertisement

Advertisement