உள்ளூராட்சிமன்றத் தேர்தலின்போது பாரம்பரியமான தமிழ் அரசியல் கட்சித் தலைவர்களிடம் தமிழ் ராஜபக்சர்களை கண்டதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
தமிழ் ராஜபக்சர்கள் தோற்றம் பெறுவார்கள் என்று ஒருபோதும் நினைக்கவில்லை, இது கவலைக்குரியது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஊடகமொன்றில் இடம்பெற்ற கலந்துரையாடலில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
வட மாகாண மக்களின் ஆதரவு எமக்கு உள்ளது. இது ஆரம்பத்தின் முதல் வெற்றியாகும். வடக்கில் பலமான அரசியலுக்கான அத்திவாரமிட்டுள்ளோம்.
நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்திகளை முன்னிலைப்படுத்தி வடக்கு மற்றும் கிழக்கில் செயற்படுவோம். சுய விருப்பத்தின் அடிப்படையில் வெகுவிரைவில் அமைச்சின் விடயதானங்கள் மறுசீரமைக்கப்படும்.
புதிய தரப்பினர்கள் அமைச்சரவையில் இணைத்துக் கொள்ளப்படுவார்கள். மக்கள் எதிர்பார்த்த அரச நிர்வாக கட்டமைப்பை வினைத்திறனாக்குவோம் என குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் அரசியல் கட்சித் தலைவர்களிடம் தமிழ் ராஜபக்சர்கள் அமைச்சர் பிமல் கவலை உள்ளூராட்சிமன்றத் தேர்தலின்போது பாரம்பரியமான தமிழ் அரசியல் கட்சித் தலைவர்களிடம் தமிழ் ராஜபக்சர்களை கண்டதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.தமிழ் ராஜபக்சர்கள் தோற்றம் பெறுவார்கள் என்று ஒருபோதும் நினைக்கவில்லை, இது கவலைக்குரியது என அவர் குறிப்பிட்டுள்ளார்.ஊடகமொன்றில் இடம்பெற்ற கலந்துரையாடலில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,வட மாகாண மக்களின் ஆதரவு எமக்கு உள்ளது. இது ஆரம்பத்தின் முதல் வெற்றியாகும். வடக்கில் பலமான அரசியலுக்கான அத்திவாரமிட்டுள்ளோம்.நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்திகளை முன்னிலைப்படுத்தி வடக்கு மற்றும் கிழக்கில் செயற்படுவோம். சுய விருப்பத்தின் அடிப்படையில் வெகுவிரைவில் அமைச்சின் விடயதானங்கள் மறுசீரமைக்கப்படும்.புதிய தரப்பினர்கள் அமைச்சரவையில் இணைத்துக் கொள்ளப்படுவார்கள். மக்கள் எதிர்பார்த்த அரச நிர்வாக கட்டமைப்பை வினைத்திறனாக்குவோம் என குறிப்பிட்டுள்ளார்.