தாய்லாந்தில் காணாமல் போன பூனையை தேடி கண்டுபிடித்த பொலிஸார் பின்னர், அதனை கைது செய்த சம்பவம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது
குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவது
தாய்லாந்தின் பெங்கொக் நகரத்தில் ஆசை ஆசையாக வளர்த்த நுட் டாங் இனத்தைச் சேர்ந்த பூனையை தொலைத்த உரிமையாளர் ஒருவர், பூனையை கண்டுபிடித்து தரும்படி பொலிஸில் புகார் ஒன்றினை அளித்திருந்தார்
இந்தநிலையில், வீதிகளில் தனியாக சுற்றி திரிந்த நுட் டாங்கை கண்ட ஒருவர்இ அருகிலிருந்த பொலிஸ் நிலையத்தில் பாதுகாப்பாக ஒப்படைத்துள்ளார்.
அழகாக உடை அணிந்து பார்ப்பதற்குஅழகாக தெரிந்த பூனை நுட் டாங்கை அங்கிருந்த பொலிஸார் செல்லம் கொஞ்ச ஆரம்பித்துள்ளனர்.
அப்போது அந்த பூனை பொலிஸாரை தனது நகத்தால் கீறியது. இதனையடுத்து நடந்த சம்பவங்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது
அதாவது மீட்பு பணியில் ஈடுபட்ட தங்களை தாக்கியதாக கூறி அந்த பூனை மீது பொலிஸார் வழக்குப்பதிவுச் செய்தனர்.
மேலும், அழகாக அந்த பூனை கொடுத்த போஸ் கொண்ட புகைப்படத்தையும் பகிர்ந்த பொலிஸ் அதிகாரி 'இந்த பூனை பொலிஸ் அதிகாரிகளைத் தாக்கிய குற்றத்தின் பேரில், கைது செய்யப்பட்டுள்ளது.
தயவு செய்து இந்த பதிவை பூனையின் உரிமையாளர் கண்ணில் படும்வரை பகிரவும். அவர் வந்து பிணையில் எடுத்தால்தான் பூனையை விடுவிக்க முடியும்.' என்று நகைச்சுவையாக பதிவிட்டிருந்தார்.
இந்த பதிவு சமூக வலைதளத்தில் வைரலான நிலையில், அனைவருக்கும் சிரிப்பலையை ஏற்படுத்தியது.
மேலும், அந்த பூனை பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருப்பதாகவும், தனக்கு அந்த பூனை வேண்டுமென்றும் பதிவிட தொடங்கினர்.
ஆனால், பூனையின் உரிமையாளரிடம் மட்டுமே பூனை ஒப்படைக்கப்படும் என்று அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதன்பின்னர், அடுத்தநாளே பூனையின் உரிமையாளர் சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலையத்திற்கு விரைந்து பூனையை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டார்.
அவர்களிடம் பூனையை ஒப்படைக்கும் முன்னர் போலியாக ஒரு எப்.ஐ.ஆர். பதிந்து பூனையை கைது செய்வதுபோல் நடித்த பொலிஸார் மன்னிப்பு கடிதம் ஒன்றினை எழுதும்படி தெரிவித்துள்ளனர்.
அந்த கடிதம் பூனை எழுதியதுபோல இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். அதில், 'எனக்கு பசியாக இருந்தது. யாரையும் கடிக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை.' என்று பூனைக் கூறுவது போல எழுதப்பட்டிருந்தது.
மேலும், 'இந்த வழக்கை முறையாகக் கையாள வேண்டும். மக்களைக் கடிப்பதை ஏற்றுக்கொள்ளலாம் என்று நினைக்கும் பூனைகளை நாம் வைத்திருக்க முடியாது' என்று நகைச்சுவையான குறிப்புடன் பொலிஸ் அதிகாரி பூனையை அதன் உரிமையாளரிடம் கொடுத்தார்.
மேலும், இவை அனைத்தையும் ஒப்புக்கொண்டதன் அடையாளமாக பூனை கடிதத்தில் ரேகை வைப்பதுப்போல எடுக்கப்பட்ட புகைப்படமும் வைரலானது. இது அனைவர் மாத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது
பொலிசாரைக் கடித்த பூனை - கைது செய்த பொலிசார் தாய்லாந்தில் காணாமல் போன பூனையை தேடி கண்டுபிடித்த பொலிஸார் பின்னர், அதனை கைது செய்த சம்பவம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளதுகுறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவது தாய்லாந்தின் பெங்கொக் நகரத்தில் ஆசை ஆசையாக வளர்த்த நுட் டாங் இனத்தைச் சேர்ந்த பூனையை தொலைத்த உரிமையாளர் ஒருவர், பூனையை கண்டுபிடித்து தரும்படி பொலிஸில் புகார் ஒன்றினை அளித்திருந்தார்இந்தநிலையில், வீதிகளில் தனியாக சுற்றி திரிந்த நுட் டாங்கை கண்ட ஒருவர்இ அருகிலிருந்த பொலிஸ் நிலையத்தில் பாதுகாப்பாக ஒப்படைத்துள்ளார். அழகாக உடை அணிந்து பார்ப்பதற்குஅழகாக தெரிந்த பூனை நுட் டாங்கை அங்கிருந்த பொலிஸார் செல்லம் கொஞ்ச ஆரம்பித்துள்ளனர். அப்போது அந்த பூனை பொலிஸாரை தனது நகத்தால் கீறியது. இதனையடுத்து நடந்த சம்பவங்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளதுஅதாவது மீட்பு பணியில் ஈடுபட்ட தங்களை தாக்கியதாக கூறி அந்த பூனை மீது பொலிஸார் வழக்குப்பதிவுச் செய்தனர். மேலும், அழகாக அந்த பூனை கொடுத்த போஸ் கொண்ட புகைப்படத்தையும் பகிர்ந்த பொலிஸ் அதிகாரி 'இந்த பூனை பொலிஸ் அதிகாரிகளைத் தாக்கிய குற்றத்தின் பேரில், கைது செய்யப்பட்டுள்ளது.தயவு செய்து இந்த பதிவை பூனையின் உரிமையாளர் கண்ணில் படும்வரை பகிரவும். அவர் வந்து பிணையில் எடுத்தால்தான் பூனையை விடுவிக்க முடியும்.' என்று நகைச்சுவையாக பதிவிட்டிருந்தார். இந்த பதிவு சமூக வலைதளத்தில் வைரலான நிலையில், அனைவருக்கும் சிரிப்பலையை ஏற்படுத்தியது. மேலும், அந்த பூனை பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருப்பதாகவும், தனக்கு அந்த பூனை வேண்டுமென்றும் பதிவிட தொடங்கினர். ஆனால், பூனையின் உரிமையாளரிடம் மட்டுமே பூனை ஒப்படைக்கப்படும் என்று அதிகாரி தெரிவித்துள்ளார். இதன்பின்னர், அடுத்தநாளே பூனையின் உரிமையாளர் சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலையத்திற்கு விரைந்து பூனையை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டார். அவர்களிடம் பூனையை ஒப்படைக்கும் முன்னர் போலியாக ஒரு எப்.ஐ.ஆர். பதிந்து பூனையை கைது செய்வதுபோல் நடித்த பொலிஸார் மன்னிப்பு கடிதம் ஒன்றினை எழுதும்படி தெரிவித்துள்ளனர். அந்த கடிதம் பூனை எழுதியதுபோல இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். அதில், 'எனக்கு பசியாக இருந்தது. யாரையும் கடிக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை.' என்று பூனைக் கூறுவது போல எழுதப்பட்டிருந்தது. மேலும், 'இந்த வழக்கை முறையாகக் கையாள வேண்டும். மக்களைக் கடிப்பதை ஏற்றுக்கொள்ளலாம் என்று நினைக்கும் பூனைகளை நாம் வைத்திருக்க முடியாது' என்று நகைச்சுவையான குறிப்புடன் பொலிஸ் அதிகாரி பூனையை அதன் உரிமையாளரிடம் கொடுத்தார். மேலும், இவை அனைத்தையும் ஒப்புக்கொண்டதன் அடையாளமாக பூனை கடிதத்தில் ரேகை வைப்பதுப்போல எடுக்கப்பட்ட புகைப்படமும் வைரலானது. இது அனைவர் மாத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது