• Sep 21 2024

இலங்கை மீண்டும் வரிசை யுகத்துக்கு செல்வதா? செப்டெம்பர் 21 தீர்மானம்! - அமைச்சர் வெளியிட்ட தகவல்

Chithra / Jul 29th 2024, 8:21 am
image

Advertisement



2022 ஆம் ஆண்டு வரிசை யுகத்துக்கு மீண்டும் செல்வதா அல்லது தற்போதைய பொருளாதார முன்னேற்றத்தை தொடர்ந்து முன்னெடுத்து செல்வதா என்பதை செப்டெம்பர் 21 நாட்டு மக்கள் தீர்மானிக்க வேண்டும்.  என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

அநுராதபுரத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (28) இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பொருளாதார ரீதியில் 2022 ஆம் ஆண்டு ஆட்சியில் இருந்த எமது அரசாங்கம் எடுத்த தவறான தீர்மானங்களினால் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்துள்ளது என்பதை ஏற்றுக்கொள்கிறோம். 

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் திட்டங்களினால் நாடு இரண்டாண்டுக்குள் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டுள்ளது. 

பொருளாதார மறுசீரமைப்புக்களுக்காக எடுத்த தீர்மானங்களினால் ஒட்டுமொத்த மக்களும் பாதிக்கப்பட்டார்கள் என்பதை ஏற்றுக்கொள்கிறோம்.

மறுசீரமைப்புக்களினால் பொருளாதார நெருக்கடியில் இருந்து நாடு மீட்சியடைந்துள்ளது. எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை என்று அரசியல்வாதிகள் மாத்திரமே குறிப்பிட்டுக் கொள்கிறார்கள். முன்னேற்றத்தை நாட்டு மக்கள் உணர்ந்துக் கொண்டுள்ளார்கள். 

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு எதிர்க்கட்சிகள் எவ்வித ஒத்துழைப்பையும் வழங்கவில்லை. நெருக்கடிகளை மாத்திரமே ஏற்படுத்தினார்கள்.

ஜனாதிபதித் தேர்தல் நிச்சயம் இடம்பெறும்.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம். என்றார்.

இலங்கை மீண்டும் வரிசை யுகத்துக்கு செல்வதா செப்டெம்பர் 21 தீர்மானம் - அமைச்சர் வெளியிட்ட தகவல் 2022 ஆம் ஆண்டு வரிசை யுகத்துக்கு மீண்டும் செல்வதா அல்லது தற்போதைய பொருளாதார முன்னேற்றத்தை தொடர்ந்து முன்னெடுத்து செல்வதா என்பதை செப்டெம்பர் 21 நாட்டு மக்கள் தீர்மானிக்க வேண்டும்.  என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.அநுராதபுரத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (28) இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.பொருளாதார ரீதியில் 2022 ஆம் ஆண்டு ஆட்சியில் இருந்த எமது அரசாங்கம் எடுத்த தவறான தீர்மானங்களினால் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்துள்ளது என்பதை ஏற்றுக்கொள்கிறோம். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் திட்டங்களினால் நாடு இரண்டாண்டுக்குள் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டுள்ளது. பொருளாதார மறுசீரமைப்புக்களுக்காக எடுத்த தீர்மானங்களினால் ஒட்டுமொத்த மக்களும் பாதிக்கப்பட்டார்கள் என்பதை ஏற்றுக்கொள்கிறோம்.மறுசீரமைப்புக்களினால் பொருளாதார நெருக்கடியில் இருந்து நாடு மீட்சியடைந்துள்ளது. எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை என்று அரசியல்வாதிகள் மாத்திரமே குறிப்பிட்டுக் கொள்கிறார்கள். முன்னேற்றத்தை நாட்டு மக்கள் உணர்ந்துக் கொண்டுள்ளார்கள். பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு எதிர்க்கட்சிகள் எவ்வித ஒத்துழைப்பையும் வழங்கவில்லை. நெருக்கடிகளை மாத்திரமே ஏற்படுத்தினார்கள்.ஜனாதிபதித் தேர்தல் நிச்சயம் இடம்பெறும்.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம். என்றார்.

Advertisement

Advertisement

Advertisement