• May 21 2024

ஜனாதிபதி தேர்தலில் தமிழர்கள் வாக்களிப்பதா? பகிஸ்கரிப்பதா? - பேராசிரியர் ரகுராம் விளக்கம்...!

Sharmi / Apr 29th 2024, 11:43 am
image

Advertisement

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை பகிஷ்கரிப்பதா அல்லது பொது வேட்பாளருக்கு வாக்களிப்பதா என்பது தொடர்பில் தமிழ் மக்கள் அரசியல் அறிவூர்வமாக முடிவெடுப்பது சிறந்தது என யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் கலைப்பீட பீடாதிபதி , பேராசிரியர் ரகுராம் தெரிவித்துள்ளார்.

யாழ் வடமராட்சி ஊடக இல்லத்தில்  நேற்றையதினம்(28)  இடம்பெற்ற, ஊடகவியலாளர் தராக்கி சிவராமின் 19ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை பொறுத்த வரையில் தமிழர் தரப்பில் பேசப்பட்டுவரும் பொது வேட்பாளர், பகிஷ்கரிப்பு ஆகிய இரண்டும் ஒரு புள்ளியில்தான் சந்திக்கின்றன. 

ஆகவே, எங்களுக்கு இன்று இருக்கக்கூடிய தெரிவுகள் எது என்பதை, எது சரியான தெரிவு என்பதை அது பொது வேட்பாளராக இருக்கலாம் அல்லது நாங்கள் வாக்களிக்காமலே ஒதுங்கி இருக்கலாம் என்ற இரண்டு தெரிவுகளிலே எது சரியானது என்பதை நாங்கள் விஞ்ஞான ரீதியாக அறிவியல் பூர்வமாக தீர்மானிக்க வேண்டும்.

எந்தக் கட்டத்திலும் சிங்கள அரசியல் சக்திகளை, சிங்கள அரசியல்வாதிகளை அடுத்து வரக்கூடிய ஆளும் தரப்புக்களை நாங்கள் நம்பவே முடியாது என்பதை அன்றிலிருந்து இன்று வரை வரலாறு எங்களுக்கு மீண்டும் மீண்டும் கூறிவந்தாலும் கூட அதை மறுத்து நாங்கள் குறுக்கு ஓட்டம் ஓடுவதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறோம் எனவும் தெரிவித்தார்.



ஜனாதிபதி தேர்தலில் தமிழர்கள் வாக்களிப்பதா பகிஸ்கரிப்பதா - பேராசிரியர் ரகுராம் விளக்கம். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை பகிஷ்கரிப்பதா அல்லது பொது வேட்பாளருக்கு வாக்களிப்பதா என்பது தொடர்பில் தமிழ் மக்கள் அரசியல் அறிவூர்வமாக முடிவெடுப்பது சிறந்தது என யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் கலைப்பீட பீடாதிபதி , பேராசிரியர் ரகுராம் தெரிவித்துள்ளார்.யாழ் வடமராட்சி ஊடக இல்லத்தில்  நேற்றையதினம்(28)  இடம்பெற்ற, ஊடகவியலாளர் தராக்கி சிவராமின் 19ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை பொறுத்த வரையில் தமிழர் தரப்பில் பேசப்பட்டுவரும் பொது வேட்பாளர், பகிஷ்கரிப்பு ஆகிய இரண்டும் ஒரு புள்ளியில்தான் சந்திக்கின்றன. ஆகவே, எங்களுக்கு இன்று இருக்கக்கூடிய தெரிவுகள் எது என்பதை, எது சரியான தெரிவு என்பதை அது பொது வேட்பாளராக இருக்கலாம் அல்லது நாங்கள் வாக்களிக்காமலே ஒதுங்கி இருக்கலாம் என்ற இரண்டு தெரிவுகளிலே எது சரியானது என்பதை நாங்கள் விஞ்ஞான ரீதியாக அறிவியல் பூர்வமாக தீர்மானிக்க வேண்டும்.எந்தக் கட்டத்திலும் சிங்கள அரசியல் சக்திகளை, சிங்கள அரசியல்வாதிகளை அடுத்து வரக்கூடிய ஆளும் தரப்புக்களை நாங்கள் நம்பவே முடியாது என்பதை அன்றிலிருந்து இன்று வரை வரலாறு எங்களுக்கு மீண்டும் மீண்டும் கூறிவந்தாலும் கூட அதை மறுத்து நாங்கள் குறுக்கு ஓட்டம் ஓடுவதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறோம் எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement