வடமாகாண வேலையில்லாத பட்டதாரிகள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், அனைத்து பட்டதாரிகளுக்கும் பாரபட்சமின்றி தொழிலை வழங்கு என்னும் கருப்பொருளிலான கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று யாழில் முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்பாக உள்ள தமிழாராட்சி மாநாட்டு படுகொலை நினைவு தூபிக்கு முன்பாக இன்று காலை 9.30 மணியளவில் தமிழ்தாய் வாழ்த்துடன் ஆரம்பமான இப் போராட்டத்தில், பட்டமளிப்பு அங்கிகளை அடையாளமாக அணிந்து வடமாகாண வேலையில்லாத பட்டதாரிகள் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.
பட்டதாரிகளுக்கும் பாராபட்சமின்றி தொழிலை வழங்கு, பட்டதாரிகளின் கனவுகளுக்கு அரசு உயிர் கொடுக்குமா? பல வருட கனவு நிறைவேறுமா? பட்டம் வீட்டில் பட்டதாரிகள் தெருவில், என்னும் வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு பட்டதாரி அங்கிகளை அணிந்தவாறு போராட்டத்தை முன்னெடுத்தனர்.
குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தின் நிறைவில் பட்டதாரி அங்கிகளை அணிந்தவாறு , யாழ் நகர பகுதிக்கு பேரணியாக குப்பை வண்டில் மற்றும் விளக்குமாறுகளை ஏந்தியவாறும், வீதிகளை துப்பரவு செய்தும் நூதனமான முறையில் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
இதன்போது கைக்குழந்தையோடும் வேலையில்லாத பட்டதாரிகளாக இருக்கும் தாய்மார்களும் இப் போராட்டத்தில் இணைந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
பட்டதாரிகளின் கனவுகளுக்கு அரசு உயிர் கொடுக்குமா யாழில் பட்டதாரி அங்கிகளை அணிந்தவாறு கவனயீர்ப்பு. வடமாகாண வேலையில்லாத பட்டதாரிகள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், அனைத்து பட்டதாரிகளுக்கும் பாரபட்சமின்றி தொழிலை வழங்கு என்னும் கருப்பொருளிலான கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று யாழில் முன்னெடுக்கப்பட்டது.யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்பாக உள்ள தமிழாராட்சி மாநாட்டு படுகொலை நினைவு தூபிக்கு முன்பாக இன்று காலை 9.30 மணியளவில் தமிழ்தாய் வாழ்த்துடன் ஆரம்பமான இப் போராட்டத்தில், பட்டமளிப்பு அங்கிகளை அடையாளமாக அணிந்து வடமாகாண வேலையில்லாத பட்டதாரிகள் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.பட்டதாரிகளுக்கும் பாராபட்சமின்றி தொழிலை வழங்கு, பட்டதாரிகளின் கனவுகளுக்கு அரசு உயிர் கொடுக்குமா பல வருட கனவு நிறைவேறுமா பட்டம் வீட்டில் பட்டதாரிகள் தெருவில், என்னும் வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு பட்டதாரி அங்கிகளை அணிந்தவாறு போராட்டத்தை முன்னெடுத்தனர்.குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தின் நிறைவில் பட்டதாரி அங்கிகளை அணிந்தவாறு , யாழ் நகர பகுதிக்கு பேரணியாக குப்பை வண்டில் மற்றும் விளக்குமாறுகளை ஏந்தியவாறும், வீதிகளை துப்பரவு செய்தும் நூதனமான முறையில் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.இதன்போது கைக்குழந்தையோடும் வேலையில்லாத பட்டதாரிகளாக இருக்கும் தாய்மார்களும் இப் போராட்டத்தில் இணைந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.