• May 20 2024

இலங்கையில் கோழிப்பண்ணை தொழிற்துறை நிலையான தன்மைக்கு திரும்புமா? SamugamMedia

Chithra / Feb 19th 2023, 1:45 pm
image

Advertisement

எதிர்வரும் ஆறு மாதங்களில் இலங்கையில் கோழிப்பண்ணை தொழிற்துறை நிலையான தன்மைக்கு திரும்பும் என கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு, கால்நடை தீவன தட்டுப்பாடு, தாய் விலங்குகள் இறக்குமதி நிறுத்தம், உரம் தட்டுப்பாட்டால் உள்நாட்டில் சோள உற்பத்தி சரிவு, சோளம் இறக்குமதி இடைநிறுத்தம் ஆகிய காரணங்களால் கோழிப்பண்ணை தொழில் சார்ந்த பொருட்களில் சரிவு ஏற்பட்டது.


எனினும் கடந்த வருட இறுதிக்குள் 36,000 முட்டையிடும் கோழிகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

நாட்டுக்கு தேவையான அளவு அரிசி கையிருப்பு உள்ளது. இதன் காரணமாக பழைய அரிசி மற்றும் நெல் இருப்புக்களை கால்நடை தீவனமாக பயன்படுத்த முடியும் என்பதனால் தட்டுப்பாடு ஏற்படாது என விவசாய அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

தனியார் துறை பண்ணைகளில் தற்போது சுமார் 15 லட்சம் கோழிகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் கோழிப்பண்ணை தொழிற்துறை நிலையான தன்மைக்கு திரும்புமா SamugamMedia எதிர்வரும் ஆறு மாதங்களில் இலங்கையில் கோழிப்பண்ணை தொழிற்துறை நிலையான தன்மைக்கு திரும்பும் என கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.கடந்த ஆண்டு, கால்நடை தீவன தட்டுப்பாடு, தாய் விலங்குகள் இறக்குமதி நிறுத்தம், உரம் தட்டுப்பாட்டால் உள்நாட்டில் சோள உற்பத்தி சரிவு, சோளம் இறக்குமதி இடைநிறுத்தம் ஆகிய காரணங்களால் கோழிப்பண்ணை தொழில் சார்ந்த பொருட்களில் சரிவு ஏற்பட்டது.எனினும் கடந்த வருட இறுதிக்குள் 36,000 முட்டையிடும் கோழிகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு குறிப்பிட்டுள்ளது.நாட்டுக்கு தேவையான அளவு அரிசி கையிருப்பு உள்ளது. இதன் காரணமாக பழைய அரிசி மற்றும் நெல் இருப்புக்களை கால்நடை தீவனமாக பயன்படுத்த முடியும் என்பதனால் தட்டுப்பாடு ஏற்படாது என விவசாய அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.தனியார் துறை பண்ணைகளில் தற்போது சுமார் 15 லட்சம் கோழிகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement