• May 20 2024

ஐக்கிய மக்கள் சக்தியினர் ஜனாதிபதிக்கு ஆதரவு? samugammedia

Chithra / Aug 28th 2023, 10:58 am
image

Advertisement

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவை வழங்குவார்கள் என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

குருநாகலில் நடைபெற்ற பேரணியில் உரையாற்றிய போதே ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் அமைச்சர் பீ.ஹரிசன் இதனை தெரிவித்துள்ளார். 

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“எதிர்வரும் செப்டம்பர் மாதம் 10ஆம் திகதி நடைபெறவுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் 76ஆவது ஆண்டு விழாவின் போது சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் அக்கட்சியில் இணைந்து கொள்வார்கள் என நம்புகின்றோம்.

கடந்த ஆண்டு தேர்தலின் போது ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதி வேட்பாளராக தெரிவு செய்ய ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் வாக்களித்தனர்.

ஆகவே அவர்கள் அனைவரும் மீண்டும் கட்சியில் இணைவதற்கு ஆர்வமாக உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் கூட அறிந்திருகின்றார்.

அது செப்டம்பர் 10 ஆம் திகதி இடம்பெறும் என நம்புகின்றோம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியினர் ஜனாதிபதிக்கு ஆதரவு samugammedia ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவை வழங்குவார்கள் என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.குருநாகலில் நடைபெற்ற பேரணியில் உரையாற்றிய போதே ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் அமைச்சர் பீ.ஹரிசன் இதனை தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,“எதிர்வரும் செப்டம்பர் மாதம் 10ஆம் திகதி நடைபெறவுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் 76ஆவது ஆண்டு விழாவின் போது சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் அக்கட்சியில் இணைந்து கொள்வார்கள் என நம்புகின்றோம்.கடந்த ஆண்டு தேர்தலின் போது ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதி வேட்பாளராக தெரிவு செய்ய ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் வாக்களித்தனர்.ஆகவே அவர்கள் அனைவரும் மீண்டும் கட்சியில் இணைவதற்கு ஆர்வமாக உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் கூட அறிந்திருகின்றார்.அது செப்டம்பர் 10 ஆம் திகதி இடம்பெறும் என நம்புகின்றோம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement