இந்த ஆண்டின் எஞ்சிய காலப்பகுதியில் நீர் கட்டண அதிகரிப்பு எதுவும் மேற்கொள்ளப்படாது என வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
நீர் கட்டணத் திருத்தங்கள் வருடத்திற்கு இரண்டு தடவைகள் மாத்திரமே மேற்கொள்ளப்படுவதாகவும், அதற்கமைய அடுத்த கட்ட கட்டண மீளாய்வு அல்லது திருத்தம் 2027ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதிக்குப் பின்னரே இடம்பெறும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
கண்டி, குண்டசாலைப் பகுதியில் நிலவும் நீர் தட்டுப்பாட்டுக்கு நிரந்தரத் தீர்வை வழங்கும் நோக்கில், பலகொல்ல நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் கொள்ளளவை அதிகரிப்பதற்கான திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நீர் வழங்கல் துறையில் சில உற்பத்திச் செலவுகள் அதிகரித்துள்ள போதிலும், நீர் கட்டணத்தை அதிகரிப்பதா அல்லது குறைப்பதா என்பது தொடர்பில் எதிர்காலத்தில் தீர்மானிக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதற்கிடையில், சுமார் 200 கோடி ரூபா செலவில் முன்னெடுக்கப்படவுள்ள பலகொல்ல நீர் சுத்திகரிப்பு நிலைய விரிவாக்கத் திட்டத்தின் மூலம் குண்டசாலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு தடையின்றித் தொடர்ச்சியாகக் குடிநீர் வழங்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அபிவிருத்திப் பணிகளுக்காக 2,000 பில்லியன் ரூபா ஒதுக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இந்த நிதி ஒதுக்கீட்டின் மூலம் நாடளாவிய ரீதியில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதுடன், மக்களின் பொருளாதார நிலையை வலுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சுசில் ரணசிங்க மேலும் குறிப்பிட்டார்.
நீர் கட்டணம் அதிகரிக்குமா அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு இந்த ஆண்டின் எஞ்சிய காலப்பகுதியில் நீர் கட்டண அதிகரிப்பு எதுவும் மேற்கொள்ளப்படாது என வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார்.நீர் கட்டணத் திருத்தங்கள் வருடத்திற்கு இரண்டு தடவைகள் மாத்திரமே மேற்கொள்ளப்படுவதாகவும், அதற்கமைய அடுத்த கட்ட கட்டண மீளாய்வு அல்லது திருத்தம் 2027ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதிக்குப் பின்னரே இடம்பெறும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.கண்டி, குண்டசாலைப் பகுதியில் நிலவும் நீர் தட்டுப்பாட்டுக்கு நிரந்தரத் தீர்வை வழங்கும் நோக்கில், பலகொல்ல நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் கொள்ளளவை அதிகரிப்பதற்கான திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.நீர் வழங்கல் துறையில் சில உற்பத்திச் செலவுகள் அதிகரித்துள்ள போதிலும், நீர் கட்டணத்தை அதிகரிப்பதா அல்லது குறைப்பதா என்பது தொடர்பில் எதிர்காலத்தில் தீர்மானிக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.இதற்கிடையில், சுமார் 200 கோடி ரூபா செலவில் முன்னெடுக்கப்படவுள்ள பலகொல்ல நீர் சுத்திகரிப்பு நிலைய விரிவாக்கத் திட்டத்தின் மூலம் குண்டசாலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு தடையின்றித் தொடர்ச்சியாகக் குடிநீர் வழங்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.மேலும், 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அபிவிருத்திப் பணிகளுக்காக 2,000 பில்லியன் ரூபா ஒதுக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.இந்த நிதி ஒதுக்கீட்டின் மூலம் நாடளாவிய ரீதியில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதுடன், மக்களின் பொருளாதார நிலையை வலுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சுசில் ரணசிங்க மேலும் குறிப்பிட்டார்.