• Apr 02 2025

போலி ஆவணங்களை வைத்து தையிட்டி காணியை அபகரிக்கவே தொடர் போராட்டங்கள் மேற்கொள்ளப்படுகிறது - விமல் வீரவன்ச குற்றச்சாட்டு

Chithra / Mar 31st 2025, 3:20 pm
image

  

இந்து தொல்பொருள் சின்னங்களுக்கு எவரும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. பௌத்த சின்னங்களே திட்டமிட்ட வகையில் அழிக்கப்படுகின்றன என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள தேசிய சுதந்திர முன்னணியின் காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

யாழ். தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு சொந்தமான காணியை அப்பிரதேசவாதிகள் போலியான காணி உறுதிப்பத்திரங்களுடன் கையகப்படுத்தியுள்ளனர்.

மிகுதியாகியுள்ள காணிகளை சட்டவிரோதமான முறையில் கையகப்படுத்திக் கொள்வதற்கு தொடர்ந்து போராட்டங்களில் விகாரையின் பூஜை வழிபாடுகளுக்கு இடையூறு விளைவிக்கிறார்கள்.

தையிட்டி விகாரையில் கடந்த வாரம் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்ற போது ஒரு தரப்பினர் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

இதனைத் தொடர்ந்து அங்கு பாதுகாப்புக்காக அமர்த்தப்பட்டிருந்த இராணுவத்தினர் அவ்விடத்தில் இருந்து வெளியேறியுள்ளார்கள். இதற்கான கட்டளையை இராணுவத் தளபதி பிறப்பித்துள்ளார்.

இந்த முறையற்ற செயற்பாடுக்கு அதிருப்தி வெளிப்படுத்தி மல்வத்து பீடம் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளது. 

பிற மதத்தை சார்ந்த இராணுவத் தளபதி இவ்விடயத்தில் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

புத்தசாசனம் மற்றும் கலை கலாச்சார அமைச்சில் பிரதான உயர் பதவிகளை வகிக்கும் இருவர் பௌத்த மதத்தை சார்ந்தவர்களல்ல, முஸ்லிம் மத விவகார திணைக்களத்துக்கோ, இந்து மத விவகார திணைக்களத்துக்கோ அந்த மதத்தை சாராத பிற மதத்தை சார்ந்தவர்களை உயர் பதவிக்கு நியமித்தால் அவர்கள் ஏற்றுக்கொள்வார்களா,

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள தொல்பொருள் இடங்களை பௌத்தம் மற்றும் இந்து என்று மத அடிப்பமையில் அடையாளப்படுத்த வேண்டாம் என்று தொல்பொருள் திணைக்களத்துக்கு அரசாங்கம் அறிவித்துள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இந்து மத தொல்பொருள் சின்னங்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. பௌத்த மத தொல்பொருள் சின்னங்கள் தான் திட்டமிட்ட வகையில் அழிக்கப்படுகின்றன.

பௌத்த மதத்தை பாதுகாக்க வேண்டியது அத்தியாவசியம் என்று அரசியலமைப்பில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே ஆட்சியாளர்கள் அதற்கமைய செயற்பட வேண்டும் என்றார்.


 

போலி ஆவணங்களை வைத்து தையிட்டி காணியை அபகரிக்கவே தொடர் போராட்டங்கள் மேற்கொள்ளப்படுகிறது - விமல் வீரவன்ச குற்றச்சாட்டு   இந்து தொல்பொருள் சின்னங்களுக்கு எவரும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. பௌத்த சின்னங்களே திட்டமிட்ட வகையில் அழிக்கப்படுகின்றன என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.கொழும்பில் உள்ள தேசிய சுதந்திர முன்னணியின் காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.அவர் மேலும் தெரிவித்ததாவது,யாழ். தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு சொந்தமான காணியை அப்பிரதேசவாதிகள் போலியான காணி உறுதிப்பத்திரங்களுடன் கையகப்படுத்தியுள்ளனர்.மிகுதியாகியுள்ள காணிகளை சட்டவிரோதமான முறையில் கையகப்படுத்திக் கொள்வதற்கு தொடர்ந்து போராட்டங்களில் விகாரையின் பூஜை வழிபாடுகளுக்கு இடையூறு விளைவிக்கிறார்கள்.தையிட்டி விகாரையில் கடந்த வாரம் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்ற போது ஒரு தரப்பினர் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.இதனைத் தொடர்ந்து அங்கு பாதுகாப்புக்காக அமர்த்தப்பட்டிருந்த இராணுவத்தினர் அவ்விடத்தில் இருந்து வெளியேறியுள்ளார்கள். இதற்கான கட்டளையை இராணுவத் தளபதி பிறப்பித்துள்ளார்.இந்த முறையற்ற செயற்பாடுக்கு அதிருப்தி வெளிப்படுத்தி மல்வத்து பீடம் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளது. பிற மதத்தை சார்ந்த இராணுவத் தளபதி இவ்விடயத்தில் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.புத்தசாசனம் மற்றும் கலை கலாச்சார அமைச்சில் பிரதான உயர் பதவிகளை வகிக்கும் இருவர் பௌத்த மதத்தை சார்ந்தவர்களல்ல, முஸ்லிம் மத விவகார திணைக்களத்துக்கோ, இந்து மத விவகார திணைக்களத்துக்கோ அந்த மதத்தை சாராத பிற மதத்தை சார்ந்தவர்களை உயர் பதவிக்கு நியமித்தால் அவர்கள் ஏற்றுக்கொள்வார்களா,வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள தொல்பொருள் இடங்களை பௌத்தம் மற்றும் இந்து என்று மத அடிப்பமையில் அடையாளப்படுத்த வேண்டாம் என்று தொல்பொருள் திணைக்களத்துக்கு அரசாங்கம் அறிவித்துள்ளது.வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இந்து மத தொல்பொருள் சின்னங்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. பௌத்த மத தொல்பொருள் சின்னங்கள் தான் திட்டமிட்ட வகையில் அழிக்கப்படுகின்றன.பௌத்த மதத்தை பாதுகாக்க வேண்டியது அத்தியாவசியம் என்று அரசியலமைப்பில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே ஆட்சியாளர்கள் அதற்கமைய செயற்பட வேண்டும் என்றார். 

Advertisement

Advertisement

Advertisement