பாணந்துறை துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின்சாரத் தடை காரணமாக இலங்கை மின்சார சபைக்கு ஏற்பட்ட இழப்பு 830 மில்லியன் ரூபா என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்வதற்காக ஹோமாகம பகுதியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
எதிர்வரும் மே மாதம் 6 ஆம் திகதி இடம்பெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்குப் பிறகு, மின் கட்டணங்களை அதிகரிப்பதன் மூலம் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இந்த இழப்பை ஈடுசெய்ய முயற்சிக்கும்.
"இது குரங்கின் பிரச்சனை இல்லை. எவ்வளவு இழப்பு? 830 மில்லியன். பிறகு இதற்கு யார் பணம் செலுத்தப் போகிறார்கள்? நினைவில் கொள்ளுங்கள்.
இந்த இழப்பை நாம் செலுத்த வேண்டியிருக்கும். மே 6 ஆம் திகதிக்குப் பிறகு, மின்சாரக் கட்டணத்தை அதிகரித்து அந்த இழப்பை ஈடுகட்டப் போகிறோம் எனவும் அவர் தெரிவித்தார்.
உள்ளூராட்சி சபை தேர்தலின் பின்னர் அதிகரிக்கப்படவுள்ள மின் கட்டணம் பாணந்துறை துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின்சாரத் தடை காரணமாக இலங்கை மின்சார சபைக்கு ஏற்பட்ட இழப்பு 830 மில்லியன் ரூபா என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்வதற்காக ஹோமாகம பகுதியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் மே மாதம் 6 ஆம் திகதி இடம்பெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்குப் பிறகு, மின் கட்டணங்களை அதிகரிப்பதன் மூலம் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இந்த இழப்பை ஈடுசெய்ய முயற்சிக்கும்."இது குரங்கின் பிரச்சனை இல்லை. எவ்வளவு இழப்பு 830 மில்லியன். பிறகு இதற்கு யார் பணம் செலுத்தப் போகிறார்கள் நினைவில் கொள்ளுங்கள். இந்த இழப்பை நாம் செலுத்த வேண்டியிருக்கும். மே 6 ஆம் திகதிக்குப் பிறகு, மின்சாரக் கட்டணத்தை அதிகரித்து அந்த இழப்பை ஈடுகட்டப் போகிறோம் எனவும் அவர் தெரிவித்தார்.