• Oct 28 2024

வடமராட்சி மக்களுக்கு பேராபத்தை ஏற்படுத்தப்போகும் காற்றாலை திட்டம் - வர்ணகுலசிங்கம்! samugammedia

Tamil nila / Jul 20th 2023, 3:31 pm
image

Advertisement

வடமராட்சி கிழக்கில் காற்றாலை திட்டம் நடைமுறைப் படுத்தப்படுமாயின் ஒட்டுமொத்த வடமராட்சி மக்களுக்கு பேராபத்தாக அமையும் ஆபத்து உள்ளதாக வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாத்தின் முன்னாள் தலைவர் நா. வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார்.

யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தில் இன்று (20) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது, வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சாமாசத்தின் முன்னாள் தலைவரும், யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச்சங்க சமாசங்களின் சம்மேளனத்தின் முன்னாள் உப தலைவருமான நா.வர்ணகுலசிங்கம் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் தெரிவிக்கையில்,

வடமராட்சி கிழக்கில் காற்றாலை அமைக்கும் திட்டம் தொடர்பில் அறிந்தும் வடமராட்சி கிழக்கு சங்கங்கள் ஏன் மௌனமாக உள்ளார்கள். வடமராட்சி கிழக்கு சமாசம் சட்டவிரோதமா இயங்கிவரும் நிலையில் அப்பிரதேசத்தை உள்ளடக்கிய சங்கங்கள் தமது மௌனத்தை கலைத்து மக்களுக்காக குரல் கொடுக்க முன்வரவேண்டும்.

காற்றாலைகள் அமைப்படுமாயின் அதனை சுற்றியுள்ள 5 கிலோ மீட்டர் தூரத்திற் அதன் அதிர்வு இருக்கும். அவ்வாறு ஏற்படும் அதிர்வுகளுக்கு மத்தியில் மக்கள் வாழமுடியாத நிலை ஏற்படும்.

அத்துடன் கடல்வளம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டு மீனவர்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் பேராபத்து உள்ளது. கடல்வளத்தையே நம்பியிருக்கும் வடமராட்சி மீனவர்களது எதிர்காலம் கேள்விக்குறியாக மாறும்.

காற்றாலை  அமைக்கப்படுமாயின் வடமராட்சி கிழக்கு பிரதேசத்திற்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த வடமராட்சி பிரதேசத்திற்கும் ஆபத்தாக அமையும். இங்கிருந்து மக்களை விரட்டியடிக்கும் திட்டமாகவே இத்திட்டம் அமையும்.

வடமராட்சி கிழக்கு சமாசம் சட்டவிரோதமாக செயற்பட்டு வரும் காரணத்தினால் சங்கங்கள் தான் இந்த விடயத்தில் முடிவெடுக்க வேணும்.

மன்னார், பூநகரி உள்ளிட்ட இடங்களில் காற்றாலை அமைப்பதற்கு அந்த பிரதேச மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். காற்றாலைகளினால் அந்த பிரதே மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை அடிப்படையாக கொண்டு அவர்கள் எதிர்த்து வருகின்றனர்.

காற்றாலைகளை அமைத்து அதன் மூலமாக வெளி நபர்கள் வருமானம் பெற்றுக் கொண்டு செல்கையில் பாதிக்கப்படுவது மக்கள் தான்.

பூநகரியில் நிராகரிக்கப்பட்ட திட்டத்தை இங்கே கொண்டுவருவதற்குகாரணம் என்ன..?

வடமராட்சி கிழக்கு சங்கங்கள் ஒன்று சேராமல் மௌனமாக இருந்தால் கடலும் நிலமும் எங்களிடம் இருந்து பறிபோகும் ஆபத்து உள்ளது என அவர் தெரிவித்தார்.

மேலும் வடமராட்சி கிழக்கில் முன்னெடுக்கப்பட்டு வரும் கடல் நீரை குடிநீராக்கும் திட்டமும் மக்களை பாதிக்கும். அத்திட்டத்தின் மூலம் கடல் வளம் பாதிக்கப்பட்டு மீன் இனங்கள் வாழமுடியாத அளவுக்கு கடல் வளத்தை நாசமாக்கும் என்று தெரிவித்தார்.

வடமராட்சி மக்களுக்கு பேராபத்தை ஏற்படுத்தப்போகும் காற்றாலை திட்டம் - வர்ணகுலசிங்கம் samugammedia வடமராட்சி கிழக்கில் காற்றாலை திட்டம் நடைமுறைப் படுத்தப்படுமாயின் ஒட்டுமொத்த வடமராட்சி மக்களுக்கு பேராபத்தாக அமையும் ஆபத்து உள்ளதாக வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாத்தின் முன்னாள் தலைவர் நா. வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார்.யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தில் இன்று (20) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது, வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சாமாசத்தின் முன்னாள் தலைவரும், யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச்சங்க சமாசங்களின் சம்மேளனத்தின் முன்னாள் உப தலைவருமான நா.வர்ணகுலசிங்கம் இவ்வாறு தெரிவித்தார்.தொடர்ந்து அவர் தெரிவிக்கையில்,வடமராட்சி கிழக்கில் காற்றாலை அமைக்கும் திட்டம் தொடர்பில் அறிந்தும் வடமராட்சி கிழக்கு சங்கங்கள் ஏன் மௌனமாக உள்ளார்கள். வடமராட்சி கிழக்கு சமாசம் சட்டவிரோதமா இயங்கிவரும் நிலையில் அப்பிரதேசத்தை உள்ளடக்கிய சங்கங்கள் தமது மௌனத்தை கலைத்து மக்களுக்காக குரல் கொடுக்க முன்வரவேண்டும்.காற்றாலைகள் அமைப்படுமாயின் அதனை சுற்றியுள்ள 5 கிலோ மீட்டர் தூரத்திற் அதன் அதிர்வு இருக்கும். அவ்வாறு ஏற்படும் அதிர்வுகளுக்கு மத்தியில் மக்கள் வாழமுடியாத நிலை ஏற்படும்.அத்துடன் கடல்வளம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டு மீனவர்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் பேராபத்து உள்ளது. கடல்வளத்தையே நம்பியிருக்கும் வடமராட்சி மீனவர்களது எதிர்காலம் கேள்விக்குறியாக மாறும்.காற்றாலை  அமைக்கப்படுமாயின் வடமராட்சி கிழக்கு பிரதேசத்திற்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த வடமராட்சி பிரதேசத்திற்கும் ஆபத்தாக அமையும். இங்கிருந்து மக்களை விரட்டியடிக்கும் திட்டமாகவே இத்திட்டம் அமையும்.வடமராட்சி கிழக்கு சமாசம் சட்டவிரோதமாக செயற்பட்டு வரும் காரணத்தினால் சங்கங்கள் தான் இந்த விடயத்தில் முடிவெடுக்க வேணும்.மன்னார், பூநகரி உள்ளிட்ட இடங்களில் காற்றாலை அமைப்பதற்கு அந்த பிரதேச மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். காற்றாலைகளினால் அந்த பிரதே மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை அடிப்படையாக கொண்டு அவர்கள் எதிர்த்து வருகின்றனர்.காற்றாலைகளை அமைத்து அதன் மூலமாக வெளி நபர்கள் வருமானம் பெற்றுக் கொண்டு செல்கையில் பாதிக்கப்படுவது மக்கள் தான்.பூநகரியில் நிராகரிக்கப்பட்ட திட்டத்தை இங்கே கொண்டுவருவதற்குகாரணம் என்ன.வடமராட்சி கிழக்கு சங்கங்கள் ஒன்று சேராமல் மௌனமாக இருந்தால் கடலும் நிலமும் எங்களிடம் இருந்து பறிபோகும் ஆபத்து உள்ளது என அவர் தெரிவித்தார்.மேலும் வடமராட்சி கிழக்கில் முன்னெடுக்கப்பட்டு வரும் கடல் நீரை குடிநீராக்கும் திட்டமும் மக்களை பாதிக்கும். அத்திட்டத்தின் மூலம் கடல் வளம் பாதிக்கப்பட்டு மீன் இனங்கள் வாழமுடியாத அளவுக்கு கடல் வளத்தை நாசமாக்கும் என்று தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement