• May 09 2024

குடிநீர் பிரச்சினையினையை சீர் செய்யும் நோக்கில் மக்களுக்காக கிணறு அமைத்து கையளிப்பு! samugammedia

Tamil nila / Oct 12th 2023, 6:23 pm
image

Advertisement

மணவாளன்பட்ட முறிப்பு  கிராமத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இணையத்தின் நிதி பங்களிப்பில் சூழலியல் மற்றும் சமூக அபிவிருத்திக்கான நிறுவனம் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இணையத்தின் ஒழுங்குபடுத்தலோடு கிணறு அமைத்து பொதுமக்களின் பாவனைக்கு நேற்று கையளிக்கப்பட்டது.


ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட மணவாளன் பட்ட முறிப்பு கிராமத்தில் 40 அடி ஆழம் கொண்ட கிணற்றினை பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இணையத்தின் (Forum) இணைப்பாளர் அருந்தவநாதன் நிரோஜன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட மேலதிக மாவட்ட செயலாளர்  சி.குணபாலன் கலந்து கொண்டு கிணற்றின் பெயர்ப்பலகையை நாடா வெட்டி திறந்து வைத்திருந்தார். 



குறித்த நிகழ்வில் மணவாளன்பட்ட கிராம அலுவலர் த.தனபால்ராஜ் , பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், கிராம மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.



குறித்த பிரதேசத்தில் வறட்சி காலத்தில் தண்ணீர் வற்றும் நிலை காணப்படுவதனால் அதனை நிவர்த்தி செய்ய குடிநீர் விநியோகம் வழங்கி வைக்கப்பட்டு வந்திருந்தது. இதனை கருத்தில் கொண்டு குறித்த பகுதி மக்களுக்கு குடிதண்ணீர் பிரச்சினையினை சீர்செய்யும் நோக்கில் இந்த குடிதண்ணீர் திட்டம் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குடிநீர் பிரச்சினையினையை சீர் செய்யும் நோக்கில் மக்களுக்காக கிணறு அமைத்து கையளிப்பு samugammedia மணவாளன்பட்ட முறிப்பு  கிராமத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இணையத்தின் நிதி பங்களிப்பில் சூழலியல் மற்றும் சமூக அபிவிருத்திக்கான நிறுவனம் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இணையத்தின் ஒழுங்குபடுத்தலோடு கிணறு அமைத்து பொதுமக்களின் பாவனைக்கு நேற்று கையளிக்கப்பட்டது.ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட மணவாளன் பட்ட முறிப்பு கிராமத்தில் 40 அடி ஆழம் கொண்ட கிணற்றினை பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இணையத்தின் (Forum) இணைப்பாளர் அருந்தவநாதன் நிரோஜன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட மேலதிக மாவட்ட செயலாளர்  சி.குணபாலன் கலந்து கொண்டு கிணற்றின் பெயர்ப்பலகையை நாடா வெட்டி திறந்து வைத்திருந்தார். குறித்த நிகழ்வில் மணவாளன்பட்ட கிராம அலுவலர் த.தனபால்ராஜ் , பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், கிராம மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.குறித்த பிரதேசத்தில் வறட்சி காலத்தில் தண்ணீர் வற்றும் நிலை காணப்படுவதனால் அதனை நிவர்த்தி செய்ய குடிநீர் விநியோகம் வழங்கி வைக்கப்பட்டு வந்திருந்தது. இதனை கருத்தில் கொண்டு குறித்த பகுதி மக்களுக்கு குடிதண்ணீர் பிரச்சினையினை சீர்செய்யும் நோக்கில் இந்த குடிதண்ணீர் திட்டம் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement