• Apr 02 2025

47ற்கும் அதிக வழக்குகளுக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்ட பெண் கைது!

Chithra / Mar 31st 2025, 12:15 pm
image

 

இலங்கையில் உள்ள 13 நீதிமன்றங்களில் 47 இற்கும் அதிகமான வழக்குகளுக்குப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள பெண் ஒருவர் பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய, அவிசாவளை - பொரலுகொட பகுதியில் தலைமறைவாகியிருந்த நிலையில் 53 வயதுடைய குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பல்வேறு பகுதியிலுள்ள மக்களிடம் கோடிக்கணக்கான ரூபா பணத்தை மோசடி செய்ததாக குறித்த பெண் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள பெண் மீது கேகாலை, அவிசாவளை, பெல்மதுள்ளை, அங்குணுகொலபெலஸ்ஸ, மஹர, கொழும்பு மற்றும் காலி ஆகிய நீதிமன்றங்களில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், சில நீதிமன்றங்களில் அவரை கைது செய்வதற்கான பிடியாணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கைதான பெண் ஜப்பானில் தொழில் பெற்றுத் தருவதாகத் தெரிவித்து பலரிடம் நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், சொகுசு வீடுகளை வாடகைக்குப் பெற்று வாடகை செலுத்தத் தவறியுள்ளதாகவும் அவர் மீது முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


47ற்கும் அதிக வழக்குகளுக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்ட பெண் கைது  இலங்கையில் உள்ள 13 நீதிமன்றங்களில் 47 இற்கும் அதிகமான வழக்குகளுக்குப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள பெண் ஒருவர் பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளார்.பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய, அவிசாவளை - பொரலுகொட பகுதியில் தலைமறைவாகியிருந்த நிலையில் 53 வயதுடைய குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.பல்வேறு பகுதியிலுள்ள மக்களிடம் கோடிக்கணக்கான ரூபா பணத்தை மோசடி செய்ததாக குறித்த பெண் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.கைது செய்யப்பட்டுள்ள பெண் மீது கேகாலை, அவிசாவளை, பெல்மதுள்ளை, அங்குணுகொலபெலஸ்ஸ, மஹர, கொழும்பு மற்றும் காலி ஆகிய நீதிமன்றங்களில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன், சில நீதிமன்றங்களில் அவரை கைது செய்வதற்கான பிடியாணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.கைதான பெண் ஜப்பானில் தொழில் பெற்றுத் தருவதாகத் தெரிவித்து பலரிடம் நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.அத்துடன், சொகுசு வீடுகளை வாடகைக்குப் பெற்று வாடகை செலுத்தத் தவறியுள்ளதாகவும் அவர் மீது முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement