• Oct 19 2024

விபசாரத்தை விட்டதற்காக பெண் மீது கொடூர தாக்குதல் -காவல்துறை எடுத்த அதிரடி நடவடிக்கை! samugammedia

Tamil nila / Apr 7th 2023, 6:56 am
image

Advertisement

விபசாரத்தில் ஈடுபட வராத காரணத்தினால் இளம் பெண் மீது தாக்குதல் நடத்தி அவரது கையடக்கத் தொலைபேசியைக் பறித்துச் சென்ற விபசார விடுதியின் உரிமையாளரும் மற்றுமொரு பெண்ணும் கைது செய்யப்பட்டதாக வந்துரம்ப காவல்துறையினர் தெரிவித்தனர்.

அம்பலாங்கொட, ரன்டம்பே மற்றும் உரகஹா ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இரு பெண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். அம்பலாங்கொடை ரன்டம்பே பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இந்த விபசார விடுதி பராமரிக்கப்பட்டு வருகிறது.

விபசார விடுதியை நடத்தி வந்த பெண் 52 வயதுடையவர் எனவும் தாக்குதலுக்கு இலக்கான பெண் 22 வயதுடையவர் எனவும் அவர் இந்த விபசார விடுதியில் சுமார் ஒரு மாத காலமாக பணிபுரிந்து வந்துள்ளதாகவும் தெரியவருகிறது.

குறித்த பெண்ணின் கணவர் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு சிறையில் உள்ளதால் அவரை பார்க்க சென்ற போது விபசார விடுதியின் உரிமையாளர் அவருடன் தொடர்பை ஏற்படுத்தியுள்ளார். பின்னர் விபசார விடுதியின் உரிமையாளர் அவருக்கு வேலை வாங்கித் தருவதாக கூறி அந்த பெண்ணை அழைத்துச் சென்று விபசாரத்தில் அமர்த்தியுள்ளார்.

சேவை பெற வரும் ஒருவரிடமிருந்து ரூ. 5000 வசூலிக்கப்பட்டதுடன், விபச்சார விடுதியின் உரிமையாளர் 3500 ரூபாயை வைத்துக்கொண்டு தாக்கப்பட்ட பெண்ணுக்கு 1500 ரூபாயை கொடுத்துள்ளார்.

இந்த விபசார விடுதியில் சுமார் ஒரு மாத காலம் பணி செய்துவிட்டு வீடு திரும்பியுள்ளார். எனினும் விபசார விடுதிக்கு அவர் திரும்பாததால், விபசார விடுதியின் உரிமையாளரான பெண்ணும் மற்றொரு பெண்ணும் இந்த பெண்ணின் வீட்டிற்கு சென்றனர். அந்த பெண் விபசாரத்திற்கு திரும்ப மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த விபசார விடுதியின் உரிமையாளரும் மற்றைய பெண்ணும் சேர்ந்து அந்த பெண்ணை தாக்கி அவரது செல்போனை பறித்து சென்றுள்ளனர்.

தாக்குதலுக்கு உள்ளான பெண் காவல்துறையில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் இரு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். வந்துரம்பா காவல் நிலைய ஆய்வாளர் ஐ.டி. சி. கிரிஷாந்த, யூ.ஓ.பி. என்.ஏ அமரதுங்க, கே.பி.ஓ.எஸ். 5313 துஷாரி மற்றும் பி.ஓ. 28869 திலகரட்ன ஆகியோரால் குறித்த இரண்டு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.


விபசாரத்தை விட்டதற்காக பெண் மீது கொடூர தாக்குதல் -காவல்துறை எடுத்த அதிரடி நடவடிக்கை samugammedia விபசாரத்தில் ஈடுபட வராத காரணத்தினால் இளம் பெண் மீது தாக்குதல் நடத்தி அவரது கையடக்கத் தொலைபேசியைக் பறித்துச் சென்ற விபசார விடுதியின் உரிமையாளரும் மற்றுமொரு பெண்ணும் கைது செய்யப்பட்டதாக வந்துரம்ப காவல்துறையினர் தெரிவித்தனர்.அம்பலாங்கொட, ரன்டம்பே மற்றும் உரகஹா ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இரு பெண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். அம்பலாங்கொடை ரன்டம்பே பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இந்த விபசார விடுதி பராமரிக்கப்பட்டு வருகிறது.விபசார விடுதியை நடத்தி வந்த பெண் 52 வயதுடையவர் எனவும் தாக்குதலுக்கு இலக்கான பெண் 22 வயதுடையவர் எனவும் அவர் இந்த விபசார விடுதியில் சுமார் ஒரு மாத காலமாக பணிபுரிந்து வந்துள்ளதாகவும் தெரியவருகிறது.குறித்த பெண்ணின் கணவர் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு சிறையில் உள்ளதால் அவரை பார்க்க சென்ற போது விபசார விடுதியின் உரிமையாளர் அவருடன் தொடர்பை ஏற்படுத்தியுள்ளார். பின்னர் விபசார விடுதியின் உரிமையாளர் அவருக்கு வேலை வாங்கித் தருவதாக கூறி அந்த பெண்ணை அழைத்துச் சென்று விபசாரத்தில் அமர்த்தியுள்ளார்.சேவை பெற வரும் ஒருவரிடமிருந்து ரூ. 5000 வசூலிக்கப்பட்டதுடன், விபச்சார விடுதியின் உரிமையாளர் 3500 ரூபாயை வைத்துக்கொண்டு தாக்கப்பட்ட பெண்ணுக்கு 1500 ரூபாயை கொடுத்துள்ளார்.இந்த விபசார விடுதியில் சுமார் ஒரு மாத காலம் பணி செய்துவிட்டு வீடு திரும்பியுள்ளார். எனினும் விபசார விடுதிக்கு அவர் திரும்பாததால், விபசார விடுதியின் உரிமையாளரான பெண்ணும் மற்றொரு பெண்ணும் இந்த பெண்ணின் வீட்டிற்கு சென்றனர். அந்த பெண் விபசாரத்திற்கு திரும்ப மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த விபசார விடுதியின் உரிமையாளரும் மற்றைய பெண்ணும் சேர்ந்து அந்த பெண்ணை தாக்கி அவரது செல்போனை பறித்து சென்றுள்ளனர்.தாக்குதலுக்கு உள்ளான பெண் காவல்துறையில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் இரு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். வந்துரம்பா காவல் நிலைய ஆய்வாளர் ஐ.டி. சி. கிரிஷாந்த, யூ.ஓ.பி. என்.ஏ அமரதுங்க, கே.பி.ஓ.எஸ். 5313 துஷாரி மற்றும் பி.ஓ. 28869 திலகரட்ன ஆகியோரால் குறித்த இரண்டு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement