• May 09 2025

இலங்கையில் சமூக ஊடகங்களில் அறிமுகமான இளைஞர்களை ஏமாற்றும் பெண்

Chithra / May 9th 2025, 1:04 pm
image


சமூக ஊடகங்களில் அறிமுகமான இளைஞர்களை ஏமாற்றி அநுராதபுரம் - மிஹிந்தலை பிரதேசத்தில் உள்ள காட்டுப் பகுதிகளுக்கு அழைத்துச் சென்று பெறுமதியான பொருட்களை கொள்ளையிட்டதாக கூறப்படும் பெண் உட்பட நால்வர் மிஹிந்தலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டர்களில்  31 வயதுடைய பெண்ணொருவரும் காணப்படுகின்றார்.

சந்தேக நபரான பெண் அநுராதபுரம், விஜயபுரம், அசோகபுரம் மற்றும் கெக்கிராவை ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் 21 முதல் 32 வயதுக்குட்பட்ட இளைஞர்களுடன் சமூக ஊடகங்களில் அறிமுகமாகி, அவர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணியுள்ளார்.

பின்னர் குறித்த இளைஞர்களிடம் நேரில் சந்திக்க வருமாறு கூறி அவர்களை ஏமாற்றி காட்டுப் பகுதிகளுக்கு அழைத்துச் சென்று தனது நண்பர்களின் உதவியுடன் இளைஞர்களை தாக்கி, அவர்களின் மோட்டார் சைக்கிள்கள், கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் பெறுமதியான பொருட்களை கொள்ளையிட்டுள்ளனர்.

இவ்வாறு பாதிக்கப்பட்ட இரண்டு இளைஞர்கள் மஹியங்கனை மற்றும் அவுக்கண பொலிஸ் நிலையங்களில் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் நான்கு கையடக்கத் தொலைப்பேசிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மிஹிந்தலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையில் சமூக ஊடகங்களில் அறிமுகமான இளைஞர்களை ஏமாற்றும் பெண் சமூக ஊடகங்களில் அறிமுகமான இளைஞர்களை ஏமாற்றி அநுராதபுரம் - மிஹிந்தலை பிரதேசத்தில் உள்ள காட்டுப் பகுதிகளுக்கு அழைத்துச் சென்று பெறுமதியான பொருட்களை கொள்ளையிட்டதாக கூறப்படும் பெண் உட்பட நால்வர் மிஹிந்தலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்டர்களில்  31 வயதுடைய பெண்ணொருவரும் காணப்படுகின்றார்.சந்தேக நபரான பெண் அநுராதபுரம், விஜயபுரம், அசோகபுரம் மற்றும் கெக்கிராவை ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் 21 முதல் 32 வயதுக்குட்பட்ட இளைஞர்களுடன் சமூக ஊடகங்களில் அறிமுகமாகி, அவர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணியுள்ளார்.பின்னர் குறித்த இளைஞர்களிடம் நேரில் சந்திக்க வருமாறு கூறி அவர்களை ஏமாற்றி காட்டுப் பகுதிகளுக்கு அழைத்துச் சென்று தனது நண்பர்களின் உதவியுடன் இளைஞர்களை தாக்கி, அவர்களின் மோட்டார் சைக்கிள்கள், கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் பெறுமதியான பொருட்களை கொள்ளையிட்டுள்ளனர்.இவ்வாறு பாதிக்கப்பட்ட இரண்டு இளைஞர்கள் மஹியங்கனை மற்றும் அவுக்கண பொலிஸ் நிலையங்களில் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் நான்கு கையடக்கத் தொலைப்பேசிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மிஹிந்தலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement