• Oct 24 2024

அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் பெண் மீது சரமாரியாக வாள்வெட்டு..! samugammedia

Chithra / Jun 12th 2023, 7:00 am
image

Advertisement

போதைப்பொருள் தகராறு காரணமாக மாளிகாவத்தை "லக்கிரு செவன" அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் பெண் ஒருவரை கூரிய ஆயுதங்களால் தாக்கிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெமட்டகொட காவல்துறையினர் தெரிவித்தனர்.

சம்பவத்தில் 38 வயதுடைய பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாகவும், அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த பெண்ணின் கைகள் மற்றும் தலையில் பலமாக தாக்கப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


அடுக்குமாடி குடியிருப்பின் 8வது மாடியில் வசிக்கும் குறித்த பெண், தரைத்தளத்தில் உள்ள வீடொன்றில் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தபோது, மர்மநபர்கள் வந்து, அவரது தலைமுடியைப் பிடித்து, அருகில் உள்ள மற்றொரு வீட்டிற்கு இழுத்துச் சென்று, சரமாரியாக வெட்டியதாக காவல்துறை விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

இந்த வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்ட சந்தேக நபர்களை குறித்த இடத்தில் இருந்த மக்கள் தாக்க முற்பட்ட போது, இருவரும் ஓடிச்சென்றதாகவும், வீட்டுத் தொகுதிக்கு அண்மித்த வீதியில் போக்குவரத்து கடமையில் ஈடுபட்ட காவல்துறையினர் அவர்களைக் கைது செய்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.


அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் பெண் மீது சரமாரியாக வாள்வெட்டு. samugammedia போதைப்பொருள் தகராறு காரணமாக மாளிகாவத்தை "லக்கிரு செவன" அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் பெண் ஒருவரை கூரிய ஆயுதங்களால் தாக்கிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெமட்டகொட காவல்துறையினர் தெரிவித்தனர்.சம்பவத்தில் 38 வயதுடைய பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாகவும், அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.குறித்த பெண்ணின் கைகள் மற்றும் தலையில் பலமாக தாக்கப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.அடுக்குமாடி குடியிருப்பின் 8வது மாடியில் வசிக்கும் குறித்த பெண், தரைத்தளத்தில் உள்ள வீடொன்றில் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தபோது, மர்மநபர்கள் வந்து, அவரது தலைமுடியைப் பிடித்து, அருகில் உள்ள மற்றொரு வீட்டிற்கு இழுத்துச் சென்று, சரமாரியாக வெட்டியதாக காவல்துறை விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.இந்த வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்ட சந்தேக நபர்களை குறித்த இடத்தில் இருந்த மக்கள் தாக்க முற்பட்ட போது, இருவரும் ஓடிச்சென்றதாகவும், வீட்டுத் தொகுதிக்கு அண்மித்த வீதியில் போக்குவரத்து கடமையில் ஈடுபட்ட காவல்துறையினர் அவர்களைக் கைது செய்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement