• May 20 2024

180 டிகிரி பாதத்தை பின்னோக்கி திருப்பி பெண் கின்னஸ் சாதனை..! samugammedia

Chithra / May 5th 2023, 4:37 pm
image

Advertisement

பெண்ணொருவர் தனது பாதங்களை 180 டிகிரிக்கு திருப்பி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். 

அமெரிக்காவில் நியூ மெக்சிகோவினை சேர்ந்த  கெல்சி என்ற 32 வயதுடைய பெண்ணே  தனது ஒரு பாதத்தை கிட்டதட்ட 180 டிகிரிக்கு திருப்பி இந்த சாதனையை படைத்துள்ளார். 

இந்த திறமை அவருக்குள் இருக்கின்றது என்பதனை அவருடன் பணியாற்றும் சகஊழியர் ஒருவரே தூண்டி விட்டுள்ளார். 

கெல்சி நியூ மெக்சிகோவில் ஒரு நூலகத்தில் பணியாற்றி வருகின்றார். இந்நிலையில், அங்கு கடந்த 2021 ஆம் ஆண்டு உலக சாதனைப் படைத்தோரின் விவரங்கள் அடங்கிய புத்தகம் வந்துள்ளது.

அதனை அவருடன் பணிபுரியும் ஊழியர் சும்மா ரேண்டமாக ஒரு பக்கத்தை திறந்து பார்த்த போது அதில் பாதத்தை திருப்பி சாதனை புரிந்தவர் குறித்த விவரங்கள் இருந்துள்ளன. 


இதுகுறித்து கெல்சி,  நன்கு திருப்புவதற்கு ஏற்றவகையிலே வளைந்த  தன்மையுடனே எனது பாதம்  இருந்தது.   ஆனால் பெரும்பாலான மக்கள் தங்கள் பாதத்தை 90 டிகிரிக்கு மேல் திருப்ப முடியும் என்பதை நான் நினைத்திருந்தாலும்  நான் அதற்கான முயற்சிகளை கூட எடுக்கவில்லை.

ஐஸ் ஸ்கேட்டிங் சென்ற போது என்னால் எனது பாதத்தை நகர்த்தாமலேயே திருப்ப முடிந்தது அதை எல்லோரிடமும் கூற  யாரும் நம்பவில்லை.

ஆனால் நான் பாதத்தை திருப்பிய போது நம்பியதுடன் மேலும் என்னால் கின்னஸ் சாதனையை முறியடிக்க முடியும் என்றும்  நம்பிக்கை தந்தனர். 

அதனால், இது தொடர்பாக கின்னஸ் சாதனை புத்தகத்திற்கு விண்ணப்பித்திருந்தேன். ஏற்கெனவே பாதத்தை   173.03 டிகிரி வரை திருப்பி  அமெரிக்காவில் உதாவை சேர்ந்த ஆரான் ஃபோர்டு  என்ற ஆண் ஒருவர் ஆண்கள் பிரிவில் சாதனை படைத்துள்ளார். 

பெண்கள் பிரிவில்  நான் 171.4 டிகிரி வரை திருப்பி உலக சாதனை பட்டியலில் இடம் பிடித்துள்ளேன் எனவும் கூறியுள்ளார்

180 டிகிரி பாதத்தை பின்னோக்கி திருப்பி பெண் கின்னஸ் சாதனை. samugammedia பெண்ணொருவர் தனது பாதங்களை 180 டிகிரிக்கு திருப்பி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். அமெரிக்காவில் நியூ மெக்சிகோவினை சேர்ந்த  கெல்சி என்ற 32 வயதுடைய பெண்ணே  தனது ஒரு பாதத்தை கிட்டதட்ட 180 டிகிரிக்கு திருப்பி இந்த சாதனையை படைத்துள்ளார். இந்த திறமை அவருக்குள் இருக்கின்றது என்பதனை அவருடன் பணியாற்றும் சகஊழியர் ஒருவரே தூண்டி விட்டுள்ளார். கெல்சி நியூ மெக்சிகோவில் ஒரு நூலகத்தில் பணியாற்றி வருகின்றார். இந்நிலையில், அங்கு கடந்த 2021 ஆம் ஆண்டு உலக சாதனைப் படைத்தோரின் விவரங்கள் அடங்கிய புத்தகம் வந்துள்ளது.அதனை அவருடன் பணிபுரியும் ஊழியர் சும்மா ரேண்டமாக ஒரு பக்கத்தை திறந்து பார்த்த போது அதில் பாதத்தை திருப்பி சாதனை புரிந்தவர் குறித்த விவரங்கள் இருந்துள்ளன. இதுகுறித்து கெல்சி,  நன்கு திருப்புவதற்கு ஏற்றவகையிலே வளைந்த  தன்மையுடனே எனது பாதம்  இருந்தது.   ஆனால் பெரும்பாலான மக்கள் தங்கள் பாதத்தை 90 டிகிரிக்கு மேல் திருப்ப முடியும் என்பதை நான் நினைத்திருந்தாலும்  நான் அதற்கான முயற்சிகளை கூட எடுக்கவில்லை.ஐஸ் ஸ்கேட்டிங் சென்ற போது என்னால் எனது பாதத்தை நகர்த்தாமலேயே திருப்ப முடிந்தது அதை எல்லோரிடமும் கூற  யாரும் நம்பவில்லை.ஆனால் நான் பாதத்தை திருப்பிய போது நம்பியதுடன் மேலும் என்னால் கின்னஸ் சாதனையை முறியடிக்க முடியும் என்றும்  நம்பிக்கை தந்தனர். அதனால், இது தொடர்பாக கின்னஸ் சாதனை புத்தகத்திற்கு விண்ணப்பித்திருந்தேன். ஏற்கெனவே பாதத்தை   173.03 டிகிரி வரை திருப்பி  அமெரிக்காவில் உதாவை சேர்ந்த ஆரான் ஃபோர்டு  என்ற ஆண் ஒருவர் ஆண்கள் பிரிவில் சாதனை படைத்துள்ளார். பெண்கள் பிரிவில்  நான் 171.4 டிகிரி வரை திருப்பி உலக சாதனை பட்டியலில் இடம் பிடித்துள்ளேன் எனவும் கூறியுள்ளார்

Advertisement

Advertisement

Advertisement