• May 16 2024

உறவினர் வீட்டில் தாலிக் கொடியை திருடிய பெண்ணுக்கு ஏற்பட்ட கதி..! யாழில் சம்பவம் samugammedia

Chithra / Sep 5th 2023, 11:41 am
image

Advertisement

பண்டத்தரிப்பு - சித்தங்கேணி வீதியிலுள்ள வீடொன்றில் புகுந்து தாலிக்கொடியை திருடிய குற்றச்சாற்றில் கைது செய்யப்பட்ட பெண் மல்லாகம் நீதி மன்றில் முற்படுத்தப்பட்டார். 

அவரை நீதிமன்றம் எச்சரித்து பிணையில் செல்ல அனுமதித்தது. 

இந்த சம்பவம் 31 ஆம் திகதி நடந்துள்ளது. 

குறித்த பெண் சித்தங்கேணியில் உள்ள உறவினர் வீட்டில்  தங்கியிருந்த நிலையில் வீட்டு  மேசையில் வைக்கப்பட்டிருந்த தாலிக்கொடி காணாமல் போயிருந்தது. இது தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

விசாரணையை மேற்கொண்ட பொலிசார் சந்தேகத்தின் அடிப்படையில் பெண் ஒருவரை கைது செய்தனர். 

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் தாலிக்கொடி தனியார் அடகு நிறுவனம் ஒன்றில் இரண்டு இலட்சம் ரூபாவுக்கு அடகுவைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

பொலிசார் நீதிமன்ற அனுமதி பெற்று அந்த நகையை மீட்டதுடன், பெண்ணையும் கைது செய்து நீதி மன்றில் முற்படுத்தினர். 

சந்தேக நபருக்கு குழந்தை இருப்பதால் கடும் எச்சரிக்கையுடன் நீதிமன்றம் பிணை வழங்கியது.


உறவினர் வீட்டில் தாலிக் கொடியை திருடிய பெண்ணுக்கு ஏற்பட்ட கதி. யாழில் சம்பவம் samugammedia பண்டத்தரிப்பு - சித்தங்கேணி வீதியிலுள்ள வீடொன்றில் புகுந்து தாலிக்கொடியை திருடிய குற்றச்சாற்றில் கைது செய்யப்பட்ட பெண் மல்லாகம் நீதி மன்றில் முற்படுத்தப்பட்டார். அவரை நீதிமன்றம் எச்சரித்து பிணையில் செல்ல அனுமதித்தது. இந்த சம்பவம் 31 ஆம் திகதி நடந்துள்ளது. குறித்த பெண் சித்தங்கேணியில் உள்ள உறவினர் வீட்டில்  தங்கியிருந்த நிலையில் வீட்டு  மேசையில் வைக்கப்பட்டிருந்த தாலிக்கொடி காணாமல் போயிருந்தது. இது தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.விசாரணையை மேற்கொண்ட பொலிசார் சந்தேகத்தின் அடிப்படையில் பெண் ஒருவரை கைது செய்தனர். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் தாலிக்கொடி தனியார் அடகு நிறுவனம் ஒன்றில் இரண்டு இலட்சம் ரூபாவுக்கு அடகுவைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.பொலிசார் நீதிமன்ற அனுமதி பெற்று அந்த நகையை மீட்டதுடன், பெண்ணையும் கைது செய்து நீதி மன்றில் முற்படுத்தினர். சந்தேக நபருக்கு குழந்தை இருப்பதால் கடும் எச்சரிக்கையுடன் நீதிமன்றம் பிணை வழங்கியது.

Advertisement

Advertisement

Advertisement