• Nov 26 2024

மகளிர் T20 உலகக் கோப்பை: பங்களாதேஷை வீழ்த்திய தென் ஆப்பிரிக்கா!

Anaath / Oct 13th 2024, 2:39 pm
image

மகளிர் டி20 உலகக் கோப்பைபோட்டியின் 16-வது லீக் ஆட்டத்தில்  பங்களாதேஷ் அணியை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா மகளிர் அணி வெற்றி பெற்றுள்ளது. 9-வது மகளிர் T20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் நடந்து வருகிறது.

இந்நிலையில் இன்று துபாயில் நடைபெற்ற 16-வது லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா, வங்கதேசம் அணிகள் மோதின. நாணயச் சுழற்சியில்  வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி துடுப்பாட்டத்தைத் தெரிவு செய்தது. அதன்படி, முதலில் துடுப்பெடுதாடிய பங்களாதேஷ் அணி 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 106 ஓட்டங்களை எடுத்தது. இதையடுத்து 107 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி, 17.2 ஓவர்களில் 3 விக்கெட் மட்டும் இழந்து இலக்கை கடந்து வெற்றிபெற்றது. நடப்பு தொடரில் தென் ஆப்பிரிக்கா அணி பெறும் 3-வது வெற்றி இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மகளிர் T20 உலகக் கோப்பை: பங்களாதேஷை வீழ்த்திய தென் ஆப்பிரிக்கா மகளிர் டி20 உலகக் கோப்பைபோட்டியின் 16-வது லீக் ஆட்டத்தில்  பங்களாதேஷ் அணியை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா மகளிர் அணி வெற்றி பெற்றுள்ளது. 9-வது மகளிர் T20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் நடந்து வருகிறது.இந்நிலையில் இன்று துபாயில் நடைபெற்ற 16-வது லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா, வங்கதேசம் அணிகள் மோதின. நாணயச் சுழற்சியில்  வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி துடுப்பாட்டத்தைத் தெரிவு செய்தது. அதன்படி, முதலில் துடுப்பெடுதாடிய பங்களாதேஷ் அணி 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 106 ஓட்டங்களை எடுத்தது. இதையடுத்து 107 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி, 17.2 ஓவர்களில் 3 விக்கெட் மட்டும் இழந்து இலக்கை கடந்து வெற்றிபெற்றது. நடப்பு தொடரில் தென் ஆப்பிரிக்கா அணி பெறும் 3-வது வெற்றி இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement