கொழும்பில் இருந்து பதுளை நோக்கி பயணித்த ரயிலில் மோதி இன்றைய தினம் ரயில் கடவை பணியாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ரயில் நிலையத்தில் ரயில் கடவை பணியாளராக பணியாற்றிவந்த தியத்தலாவ பகுதியைச் சேர்ந்த 26 வயதான நபரே மேற்படி உயிரிழந்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்
குறித்த நபர், ரயில் தண்டவாளத்தில் படுத்து உறங்கியுள்ளார். அப்போதே கொழும்பில் இருந்து பதுளை நோக்கி பயணித்த ரயில் அவர் மீது மோதி உயிரிழந்துள்ளார் என பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் அதே ரயிலில் ஏற்றி அம்பெவெல ரயில் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பட்டிபொல பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்
தண்டவாளத்தில் படுத்துறங்கிய பணியாளர்; மேலே ஏறிய ரயில் பிரிந்தது உயிர் கொழும்பில் இருந்து பதுளை நோக்கி பயணித்த ரயிலில் மோதி இன்றைய தினம் ரயில் கடவை பணியாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ரயில் நிலையத்தில் ரயில் கடவை பணியாளராக பணியாற்றிவந்த தியத்தலாவ பகுதியைச் சேர்ந்த 26 வயதான நபரே மேற்படி உயிரிழந்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்குறித்த நபர், ரயில் தண்டவாளத்தில் படுத்து உறங்கியுள்ளார். அப்போதே கொழும்பில் இருந்து பதுளை நோக்கி பயணித்த ரயில் அவர் மீது மோதி உயிரிழந்துள்ளார் என பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. உயிரிழந்தவரின் சடலம் அதே ரயிலில் ஏற்றி அம்பெவெல ரயில் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பட்டிபொல பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்