உலகத் தமிழர் பேரவையின் (GTF) உறுப்பினர்கள் இன்று (09) யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டு முக்கிய சந்திப்புக்களில் ஈடுபடவுள்ளனர்.
இது தொடர்பில் உலகத் தமிழர் பேரவையின் பணிப்பாளர் பவன் பவகுகன் தெரிவிக்கையில்,
"சிறந்த இலங்கைக்கான சங்க அமைப்பின் தேரர்கள் குழுவினர் மற்றும் உலகத் தமிழர் பேரவையின் உறுப்பினர்கள் இன்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொள்கின்றனர்.
இதன்போது நாம் வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி கோயிலில் விசேட வழிபாடுகளில் ஈடுபடவுள்ளோம்.
அதன்பின்னர் நல்லை ஆதீன குருமுதல்வர் மற்றும் யாழ். மறைமாவட்ட ஆயர் ஆகியோரைச் சந்தித்து, இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம், மறுசீரமைப்பு, சமூக நலன் மற்றும் அபிவிருத்தி ஆகியவற்றை மையமாகக் கொண்ட முக்கிய விடயங்களை உள்ளடக்கிய “இமயமலைப் பிரகடனம்” தொடர்பில் தெளிவுபடுத்தவுள்ளோம் எனவும் தெரிவித்தார்.
உலகத் தமிழர் பேரவையினர் யாழிற்கு விஜயம்.samugammedia உலகத் தமிழர் பேரவையின் (GTF) உறுப்பினர்கள் இன்று (09) யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டு முக்கிய சந்திப்புக்களில் ஈடுபடவுள்ளனர்.இது தொடர்பில் உலகத் தமிழர் பேரவையின் பணிப்பாளர் பவன் பவகுகன் தெரிவிக்கையில்,"சிறந்த இலங்கைக்கான சங்க அமைப்பின் தேரர்கள் குழுவினர் மற்றும் உலகத் தமிழர் பேரவையின் உறுப்பினர்கள் இன்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொள்கின்றனர்.இதன்போது நாம் வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி கோயிலில் விசேட வழிபாடுகளில் ஈடுபடவுள்ளோம். அதன்பின்னர் நல்லை ஆதீன குருமுதல்வர் மற்றும் யாழ். மறைமாவட்ட ஆயர் ஆகியோரைச் சந்தித்து, இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம், மறுசீரமைப்பு, சமூக நலன் மற்றும் அபிவிருத்தி ஆகியவற்றை மையமாகக் கொண்ட முக்கிய விடயங்களை உள்ளடக்கிய “இமயமலைப் பிரகடனம்” தொடர்பில் தெளிவுபடுத்தவுள்ளோம் எனவும் தெரிவித்தார்.