• Nov 25 2024

யாழில் செல்வம் தரும் கறுவா நூல் வெளியீடு!

Tamil nila / Jun 6th 2024, 10:13 pm
image

செல்வம் தரும் கறுவா நூல் வெளியீட்டுவிழா இன்று 06.06.2024 வியாழக்கிழமை காலை 10 மணிக்கு 

திருநெல்வேலியில் அமைந்துள்ள யாழ். மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்தில் இடம்பெற்றது. 

கறுவா செய்கைக்கான வழிகாட்டியான இந்நூலின் தொகுப்பாசிரியர் சுந்தரமூர்த்தி புவனகுமார் அவர்களின் வரவேற்புரையினையும் தலைமையுரையையும் தொடர்ந்து அறிமுகவுரையினை ஓய்வுநிலை ஆங்கில மொழி கற்பித்தல் பேராசிரியர் ம. சரவணபவ ஐயர் நிகழ்த்தினார். 

நூல் மதிப்பீட்டுரையினை மூத்த எழுத்தாளரும், சமூக செயற்பாட்டாளருமான வடகோவை வரதராஜன்  அவர்கள் நிகழ்த்தினார். 

தொடர்ந்து வடமாகாண விவசாய பணிப்பாளர் சுகந்தினி செந்தில்குமரன், யாழ். மாவட்ட பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் அஞ்சனாதேவி  சிறீரங்கன், யாழ். பல்கலைக்கழக சித்த மருத்துவ அலகின் தலைவர் விவியன் சத்தியசீலன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்கள் உரைகளை நிகழ்த்தினார்கள் .

தொடர்ந்து கறுவா பயிர் செய்கையில் ஈடுபட்ட பண்ணையாளரது அனுபவ உரையும் இடம்பெற்றது. 

பணப்பயிரான கறுவா செய்கையில் கடந்த பத்தாண்டுகளாக ஆர்வமுடன் செயற்பட்டுவரும்   சுந்தரமூர்த்தி புவனகுமார் அவர்கள், உலகெங்கிலும் இருந்து கொண்டு வந்த கறுவா சார்ந்த பல்வேறு உற்பத்திகள் குறித்தும் அங்கு வருகை தந்தவர்களுக்கு விளக்கினார். நிகழ்வுக்கு வந்திருந்த அனைவருக்கும் குறித்த நூல் இலவசமாக வழங்கப்பட்டது.




யாழில் செல்வம் தரும் கறுவா நூல் வெளியீடு செல்வம் தரும் கறுவா நூல் வெளியீட்டுவிழா இன்று 06.06.2024 வியாழக்கிழமை காலை 10 மணிக்கு திருநெல்வேலியில் அமைந்துள்ள யாழ். மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்தில் இடம்பெற்றது. கறுவா செய்கைக்கான வழிகாட்டியான இந்நூலின் தொகுப்பாசிரியர் சுந்தரமூர்த்தி புவனகுமார் அவர்களின் வரவேற்புரையினையும் தலைமையுரையையும் தொடர்ந்து அறிமுகவுரையினை ஓய்வுநிலை ஆங்கில மொழி கற்பித்தல் பேராசிரியர் ம. சரவணபவ ஐயர் நிகழ்த்தினார். நூல் மதிப்பீட்டுரையினை மூத்த எழுத்தாளரும், சமூக செயற்பாட்டாளருமான வடகோவை வரதராஜன்  அவர்கள் நிகழ்த்தினார். தொடர்ந்து வடமாகாண விவசாய பணிப்பாளர் சுகந்தினி செந்தில்குமரன், யாழ். மாவட்ட பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் அஞ்சனாதேவி  சிறீரங்கன், யாழ். பல்கலைக்கழக சித்த மருத்துவ அலகின் தலைவர் விவியன் சத்தியசீலன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்கள் உரைகளை நிகழ்த்தினார்கள் .தொடர்ந்து கறுவா பயிர் செய்கையில் ஈடுபட்ட பண்ணையாளரது அனுபவ உரையும் இடம்பெற்றது. பணப்பயிரான கறுவா செய்கையில் கடந்த பத்தாண்டுகளாக ஆர்வமுடன் செயற்பட்டுவரும்   சுந்தரமூர்த்தி புவனகுமார் அவர்கள், உலகெங்கிலும் இருந்து கொண்டு வந்த கறுவா சார்ந்த பல்வேறு உற்பத்திகள் குறித்தும் அங்கு வருகை தந்தவர்களுக்கு விளக்கினார். நிகழ்வுக்கு வந்திருந்த அனைவருக்கும் குறித்த நூல் இலவசமாக வழங்கப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement