• Nov 23 2024

யாழில் ஆரம்பமாகவுள்ள யோகக்கலை அடிப்படை கற்கைநெறி...!

Sharmi / May 20th 2024, 3:37 pm
image

வடமாகாண கல்வி அமைச்சின் இளைஞர் விவகார அலகினால் உடல், உள மேம்பாட்டிற்காக இலவசமாக நடத்தப்பட்டு வருகின்ற யோகக்கலை அடிப்படை கற்கைநெறியின் புதிய பிரிவு நல்லூர்க் கந்தன் ஆலய பின்வீதியில் அமைந்துள்ள நல்லூர் மங்கையற்கரசி வித்தியாலயத்தில் எதிர்வரும் முதலாம் திகதி காலை 6 மணிக்கு ஆரம்பமாகி நடைபெறவுள்ளது.  

சனி, ஞாயிறு தினங்களிலும் அரச விடுமுறை தினங்களிலும் காலை 6.00 மணிமுதல் காலை 8.00 மணிவரை நடைபெறும் இவ்வகுப்புகளில் ஆர்வமுள்ள ஆண்கள், பெண்கள் இருபாலாரும் வயது வேறுபாடின்றி கலந்துகொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. 

அதேவேளை , சுமார் மூன்று மாத காலங்களைக் கொண்டமைந்த இவ் அடிப்படைக் கற்கைநெறியை பூரணமாக முடிப்பவர்களுக்கு கல்வி அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ்களும் வழங்கப்படவிருக்கின்றன.

பயிலவிரும்புவோர் அன்றைய தினம் நேரடியாக வந்து பதிவுகளை மேற்கொண்டு வகுப்பில் இணைந்து கொள்ளுமாறும் மேலதிக தகவல்களை 021 222 2203 எனும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ளலாம் எனவும் கல்வி அமைச்சின் செயலாளர் ம. பற்றிக் டிறஞ்சன் அறிவித்துள்ளார்.

யாழில் ஆரம்பமாகவுள்ள யோகக்கலை அடிப்படை கற்கைநெறி. வடமாகாண கல்வி அமைச்சின் இளைஞர் விவகார அலகினால் உடல், உள மேம்பாட்டிற்காக இலவசமாக நடத்தப்பட்டு வருகின்ற யோகக்கலை அடிப்படை கற்கைநெறியின் புதிய பிரிவு நல்லூர்க் கந்தன் ஆலய பின்வீதியில் அமைந்துள்ள நல்லூர் மங்கையற்கரசி வித்தியாலயத்தில் எதிர்வரும் முதலாம் திகதி காலை 6 மணிக்கு ஆரம்பமாகி நடைபெறவுள்ளது.  சனி, ஞாயிறு தினங்களிலும் அரச விடுமுறை தினங்களிலும் காலை 6.00 மணிமுதல் காலை 8.00 மணிவரை நடைபெறும் இவ்வகுப்புகளில் ஆர்வமுள்ள ஆண்கள், பெண்கள் இருபாலாரும் வயது வேறுபாடின்றி கலந்துகொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. அதேவேளை , சுமார் மூன்று மாத காலங்களைக் கொண்டமைந்த இவ் அடிப்படைக் கற்கைநெறியை பூரணமாக முடிப்பவர்களுக்கு கல்வி அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ்களும் வழங்கப்படவிருக்கின்றன.பயிலவிரும்புவோர் அன்றைய தினம் நேரடியாக வந்து பதிவுகளை மேற்கொண்டு வகுப்பில் இணைந்து கொள்ளுமாறும் மேலதிக தகவல்களை 021 222 2203 எனும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ளலாம் எனவும் கல்வி அமைச்சின் செயலாளர் ம. பற்றிக் டிறஞ்சன் அறிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement