• Dec 16 2024

சபாநாயகராக வருவதற்கு கலாநிதி பட்டம் தேவையில்லை..! சமல் ராஜபக்ச விளக்கம்

Chithra / Dec 16th 2024, 8:31 am
image

 

சபாநாயகராக வருவதற்கு கலாநிதி பட்டமோ, கல்விச் சான்றிதழோ தேவையில்லை, நாடாளுமன்றத்திற்கு தெரிவான எவரும் சபாநாயகராக முடியும்  என முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்தார்.

முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வல கலாநிதி பட்டம் பெற்றவர் என்ற விபரங்களை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தால் மட்டுமே பிரச்சினை ஏற்படும்.

கலாநிதி பட்டம் தொடர்பான சர்ச்சை வெடித்ததை அடுத்து, சபாநாயகர் பதவியிலிருந்து ரன்வல விலகியது பாராட்டுக்குரியது என சமல் ராஜபக்ச கூறினார். 

இது ஒரு பெரிய பிரச்சினை அல்ல என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

சபாநாயகராக வருவதற்கு கலாநிதி பட்டம் தேவையில்லை. சமல் ராஜபக்ச விளக்கம்  சபாநாயகராக வருவதற்கு கலாநிதி பட்டமோ, கல்விச் சான்றிதழோ தேவையில்லை, நாடாளுமன்றத்திற்கு தெரிவான எவரும் சபாநாயகராக முடியும்  என முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்தார்.முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வல கலாநிதி பட்டம் பெற்றவர் என்ற விபரங்களை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தால் மட்டுமே பிரச்சினை ஏற்படும்.கலாநிதி பட்டம் தொடர்பான சர்ச்சை வெடித்ததை அடுத்து, சபாநாயகர் பதவியிலிருந்து ரன்வல விலகியது பாராட்டுக்குரியது என சமல் ராஜபக்ச கூறினார். இது ஒரு பெரிய பிரச்சினை அல்ல என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement