• Nov 26 2024

ராஜபக்ஷக்களைப் பாதுகாக்கும் நீங்கள் மக்களுக்குத் தீர்வு வழங்கவேமாட்டீர்கள்! - ரணிலுக்குச் சஜித் பதிலடி

Chithra / Mar 7th 2024, 8:19 am
image


நாட்டைச் சீரழித்தவர்களைப் பாதுகாக்கும் செயற்பாடுகளிலேயே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஈடுபடுகின்றார் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரைக்குப் பதில் உரை நிகழ்த்தும்போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு கூறினார்.

"ஜனாதிபதி உரையாற்றும்போது நரகம் தொடர்பிலும், தொங்கு பாலம் தொடர்பிலும் குறிப்பிட்டார். ஆனால், நரகத்தின் நிறுவுநர்களை நீங்கள்தானே பாதுகாக்கின்றீர்கள். 

இந்த நாட்டை வங்குரோத்து நிலைக்குக் கொண்டு சென்றவர்களிடமிருந்து நாட்டு மக்கள் நட்டஈட்டைப் பெறுவதைத் தடுத்தது நீங்கள்தானே. நாட்டின் சொத்துக்களைச் கிடைக்கச் செய்யாது இருப்பவரும் நீங்கள்தானே. திருடர்களின் ஆணையில் பதவிக்கு வந்தவர் நீங்களே. நாட்டைச் சீரழித்த ராஜபக்‌ஷக்கள் அந்தத் தொங்கு பாலத்தில் மேலே வர உதவுபவரும் நீங்களே.

உங்களின் செயற்பாடுகளால் 220 இலட்சம் மக்கள் நிர்க்கதியாகியுள்ளனர். நீங்கள் இந்த நாட்டு மக்களுக்கு வழங்கும் தீர்வுதான் என்ன? என்று ஜனாதிபதியிடம் கேட்கின்றேன்.

இதேவேளை, தான் பெரிய தீ பிழம்புக்குள் பாய்ந்துள்ளதாகவே ஜனாதிபதி கூறியுள்ளார். ஆனால், அவர் உண்மையில் பாய்ந்தது தீ பிழம்புக்குள் அல்ல. திருடர்கள் கூட்டத்துக்குள்ளேயே ஆகும்.

 ஒருபோதும் தனக்கு வாக்குகள் மூலம் பெற்றுக்கொள்ள முடியாததைத் திருடர்கள் மூலம் பெற்றுக்கொண்டுள்ளார் ஜனாதிபதி.

ஜனாதிபதி மாதாந்தம் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்கின்றார். நிகழ்நிலைக் காப்புச் சட்டம், பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் மூலம் ஒடுக்குமுறைகளைச் செய்ய அவர் முயற்சிக்கின்றார். சிம்மாசன உரையை ஆற்றும் ஆசையில் அவர் இருக்கின்றார்.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் எந்தக் கருத்தையும் ஜனாதிபதி இப்போது கூறுவதில்லை. தொங்கு பாலத்தில் ஏறி மேலே வந்தவர்கள் நாட்டைச் சீர்குலைத்த ராஜபக்‌ஷ குழுக்களே ஆகும்- என்றார்.

ராஜபக்ஷக்களைப் பாதுகாக்கும் நீங்கள் மக்களுக்குத் தீர்வு வழங்கவேமாட்டீர்கள் - ரணிலுக்குச் சஜித் பதிலடி நாட்டைச் சீரழித்தவர்களைப் பாதுகாக்கும் செயற்பாடுகளிலேயே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஈடுபடுகின்றார் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரைக்குப் பதில் உரை நிகழ்த்தும்போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு கூறினார்."ஜனாதிபதி உரையாற்றும்போது நரகம் தொடர்பிலும், தொங்கு பாலம் தொடர்பிலும் குறிப்பிட்டார். ஆனால், நரகத்தின் நிறுவுநர்களை நீங்கள்தானே பாதுகாக்கின்றீர்கள். இந்த நாட்டை வங்குரோத்து நிலைக்குக் கொண்டு சென்றவர்களிடமிருந்து நாட்டு மக்கள் நட்டஈட்டைப் பெறுவதைத் தடுத்தது நீங்கள்தானே. நாட்டின் சொத்துக்களைச் கிடைக்கச் செய்யாது இருப்பவரும் நீங்கள்தானே. திருடர்களின் ஆணையில் பதவிக்கு வந்தவர் நீங்களே. நாட்டைச் சீரழித்த ராஜபக்‌ஷக்கள் அந்தத் தொங்கு பாலத்தில் மேலே வர உதவுபவரும் நீங்களே.உங்களின் செயற்பாடுகளால் 220 இலட்சம் மக்கள் நிர்க்கதியாகியுள்ளனர். நீங்கள் இந்த நாட்டு மக்களுக்கு வழங்கும் தீர்வுதான் என்ன என்று ஜனாதிபதியிடம் கேட்கின்றேன்.இதேவேளை, தான் பெரிய தீ பிழம்புக்குள் பாய்ந்துள்ளதாகவே ஜனாதிபதி கூறியுள்ளார். ஆனால், அவர் உண்மையில் பாய்ந்தது தீ பிழம்புக்குள் அல்ல. திருடர்கள் கூட்டத்துக்குள்ளேயே ஆகும். ஒருபோதும் தனக்கு வாக்குகள் மூலம் பெற்றுக்கொள்ள முடியாததைத் திருடர்கள் மூலம் பெற்றுக்கொண்டுள்ளார் ஜனாதிபதி.ஜனாதிபதி மாதாந்தம் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்கின்றார். நிகழ்நிலைக் காப்புச் சட்டம், பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் மூலம் ஒடுக்குமுறைகளைச் செய்ய அவர் முயற்சிக்கின்றார். சிம்மாசன உரையை ஆற்றும் ஆசையில் அவர் இருக்கின்றார்.உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் எந்தக் கருத்தையும் ஜனாதிபதி இப்போது கூறுவதில்லை. தொங்கு பாலத்தில் ஏறி மேலே வந்தவர்கள் நாட்டைச் சீர்குலைத்த ராஜபக்‌ஷ குழுக்களே ஆகும்- என்றார்.

Advertisement

Advertisement

Advertisement