தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலம்போட்டாறு ஊத்தவாய்க்கால் ஆற்றில் மாடு மேய்க்க சென்ற ஒருவரை முதலை கடித்ததில் உயிரிழந்த சம்பவம் ஒன்று இன்று (03)இடம் பெற்றது.
இவ்வாறு முதலையின் தாக்குதலுக்கு உள்ளானவர் சிப்பித்திடல் தம்பலகாமத்தை சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான கே.சசிகுமார் வயது(36) என்பவரே இலக்காகியுள்ளார். மாடு மேய்க்க சென்றவரே இவ்வாறு முதலைக்கடியின் தாக்குதளுக்கு உள்ளானதாக ஆரம்பகட்ட விசாரனை மூலம் தெரியவருகிறது.
மாடு மேய்க்க சென்ற இருவரில் ஒருவரே இவ்வாறு குறித்த ஆற்றில் காணாமல் போயுள்ளார் இது தொடர்பில் பொது மக்கள் தேடுதல் முயற்சியில் ஈடுபட்டு சடலத்தை மீட்டனர்.
குறித்த சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலையில் பிரேர பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை தம்பலகாமம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
திருகோணமலையில் முதலை கடிக்கு இலக்காகி இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு samugammedia தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலம்போட்டாறு ஊத்தவாய்க்கால் ஆற்றில் மாடு மேய்க்க சென்ற ஒருவரை முதலை கடித்ததில் உயிரிழந்த சம்பவம் ஒன்று இன்று (03)இடம் பெற்றது.இவ்வாறு முதலையின் தாக்குதலுக்கு உள்ளானவர் சிப்பித்திடல் தம்பலகாமத்தை சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான கே.சசிகுமார் வயது(36) என்பவரே இலக்காகியுள்ளார். மாடு மேய்க்க சென்றவரே இவ்வாறு முதலைக்கடியின் தாக்குதளுக்கு உள்ளானதாக ஆரம்பகட்ட விசாரனை மூலம் தெரியவருகிறது.மாடு மேய்க்க சென்ற இருவரில் ஒருவரே இவ்வாறு குறித்த ஆற்றில் காணாமல் போயுள்ளார் இது தொடர்பில் பொது மக்கள் தேடுதல் முயற்சியில் ஈடுபட்டு சடலத்தை மீட்டனர். குறித்த சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலையில் பிரேர பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை தம்பலகாமம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.