• Nov 28 2024

பாம்பு கடித்து இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு - வவுனியாவில் துயரம்

Chithra / Nov 27th 2024, 11:31 am
image

 

வவுனியா - நெடுங்கேணி பட்டிக்குடியிருப்பில் பாம்பு கடித்து இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.

பட்டிக்குடியிருப்பில் வசிக்கும் 20 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்தார்.

பாம்பு கடிக்கு உள்ளான அவரை, நெடுங்கணி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு,

அங்கிருந்து வவுனியா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டபோதும் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

பாம்பு கடித்து இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு - வவுனியாவில் துயரம்  வவுனியா - நெடுங்கேணி பட்டிக்குடியிருப்பில் பாம்பு கடித்து இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இச் சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.பட்டிக்குடியிருப்பில் வசிக்கும் 20 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்தார்.பாம்பு கடிக்கு உள்ளான அவரை, நெடுங்கணி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு,அங்கிருந்து வவுனியா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டபோதும் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

Advertisement

Advertisement

Advertisement