• Jan 24 2025

மூச்சு எடுக்க சிரமப்பட்ட இளம் குடும்பப் பெண் - யாழில் நடந்த சோகம்

Chithra / Jan 24th 2025, 7:28 am
image

  

யாழ்ப்பாணத்தில் மூச்சு எடுப்பதற்கு சிரமப்பட்ட பெண் ஒருவர் நேற்றுமுன்தினம் (22) உயிரிழந்துள்ளார்.

மூளாய் - வேரம் பகுதியை சேர்ந்த 36 வயதுடைய தர்சன் பாமினி என்ற மூன்று பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த குடும்பப் பெண்ணுக்கு  மூச்சு எடுப்பதில் சிரமம் ஏற்பட்டது. 

இந்நிலையில் அவர் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதன வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். 

நாட்பட்ட நுரையீரல் அடைப்பு காரணமாக மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.

மூச்சு எடுக்க சிரமப்பட்ட இளம் குடும்பப் பெண் - யாழில் நடந்த சோகம்   யாழ்ப்பாணத்தில் மூச்சு எடுப்பதற்கு சிரமப்பட்ட பெண் ஒருவர் நேற்றுமுன்தினம் (22) உயிரிழந்துள்ளார்.மூளாய் - வேரம் பகுதியை சேர்ந்த 36 வயதுடைய தர்சன் பாமினி என்ற மூன்று பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.குறித்த குடும்பப் பெண்ணுக்கு  மூச்சு எடுப்பதில் சிரமம் ஏற்பட்டது. இந்நிலையில் அவர் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதன வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். நாட்பட்ட நுரையீரல் அடைப்பு காரணமாக மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement