• Sep 21 2024

பொலிஸாரின் சித்திரவதையால் உயிரிழந்த இளைஞன் - இன்று நீதிமன்றில் விசாரணை..! samugammedia

Chithra / Nov 27th 2023, 10:22 am
image

Advertisement

 

வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு உயிரிழந்த நாகராசா அலெக்ஸின் வழக்கு விசாரணைகள் இன்று யாழ்.நீதவான் நீதிமன்றத்தில் நடைபெறவுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற வழக்கு விசாரணைகளின் போது, சட்ட வைத்திய அதிகாரி , சிறைச்சாலை உத்தியோகஸ்தர்கள், உயிரிழந்த இளைஞனுடன் கைதான மற்றுமொரு இளைஞன் உள்ளிட்ட ஐவர், மன்றில் தோன்றி சாட்சியம் அளித்தனர்.

அதில் மூன்றாவது சாட்சியமான உயிரிழந்த இளைஞனுடன் கைதான மற்றைய இளைஞன், தம்மை சித்திரவதைக்கு உள்ளாக்கினார்கள் என இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் பெயரை குறிப்பிட்டு, அடையாளம் கூறியதுடன், அங்க அடையாளங்களை கூறி, மேலும் மூவரை அடையாளம் கூறி இருந்தார்.

சாட்சி அடையாளம் கூறிய ஐவரையும் உடனடியாக கைது செய்து நீதிமன்றில் முற்படுத்த நீதவான் உத்தரவிட்டதை அடுத்து , நான்கு பொலிஸ் உத்தியோகஸ்தர்களை கைது செய்து நேற்று முன்தினம்(25) நீதிமன்றில் ஆஜர் படுத்தப்பட்டனர்.

இதன்போது  அவர்களை எதிர்வரும் 4ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட நீதவான், அன்றைய தினம் அடையாள அணிவகுப்பு நடத்தவும் பணித்தார்.

இதன்போது கைதான நான்கு பொலிஸ் உத்தியோகஸ்தர்களினாலும் ஏற்கனவே கைது செய்யப்பட்டு, யாழ்ப்பாண சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்கள் மற்றும் குற்றவாளிகளினால் ஆபத்து ஏற்படும் அச்சம் காணப்படுவதால் அவர்களை அநுராதபுர சிறைச்சாலையில் தடுத்து வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த வழக்கு இன்றைய தினம் திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பொலிஸாரின் சித்திரவதையால் உயிரிழந்த இளைஞன் - இன்று நீதிமன்றில் விசாரணை. samugammedia  வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு உயிரிழந்த நாகராசா அலெக்ஸின் வழக்கு விசாரணைகள் இன்று யாழ்.நீதவான் நீதிமன்றத்தில் நடைபெறவுள்ளது.கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற வழக்கு விசாரணைகளின் போது, சட்ட வைத்திய அதிகாரி , சிறைச்சாலை உத்தியோகஸ்தர்கள், உயிரிழந்த இளைஞனுடன் கைதான மற்றுமொரு இளைஞன் உள்ளிட்ட ஐவர், மன்றில் தோன்றி சாட்சியம் அளித்தனர்.அதில் மூன்றாவது சாட்சியமான உயிரிழந்த இளைஞனுடன் கைதான மற்றைய இளைஞன், தம்மை சித்திரவதைக்கு உள்ளாக்கினார்கள் என இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் பெயரை குறிப்பிட்டு, அடையாளம் கூறியதுடன், அங்க அடையாளங்களை கூறி, மேலும் மூவரை அடையாளம் கூறி இருந்தார்.சாட்சி அடையாளம் கூறிய ஐவரையும் உடனடியாக கைது செய்து நீதிமன்றில் முற்படுத்த நீதவான் உத்தரவிட்டதை அடுத்து , நான்கு பொலிஸ் உத்தியோகஸ்தர்களை கைது செய்து நேற்று முன்தினம்(25) நீதிமன்றில் ஆஜர் படுத்தப்பட்டனர்.இதன்போது  அவர்களை எதிர்வரும் 4ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட நீதவான், அன்றைய தினம் அடையாள அணிவகுப்பு நடத்தவும் பணித்தார்.இதன்போது கைதான நான்கு பொலிஸ் உத்தியோகஸ்தர்களினாலும் ஏற்கனவே கைது செய்யப்பட்டு, யாழ்ப்பாண சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்கள் மற்றும் குற்றவாளிகளினால் ஆபத்து ஏற்படும் அச்சம் காணப்படுவதால் அவர்களை அநுராதபுர சிறைச்சாலையில் தடுத்து வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.இந்நிலையில் குறித்த வழக்கு இன்றைய தினம் திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement