• Dec 11 2024

தேரரை மிரட்டி ஒரு வருடமாக பணம் பறித்த இளைஞர்கள் கைது

Chithra / Nov 13th 2024, 3:16 pm
image

பொலன்னறுவை - திம்புலாகல பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் பணிபுரியும் தேரர் ஒருவரை மிரட்டி பணம் பறித்த இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

குறித்த இளைஞர்கள் தேரரை மிரட்டி  03 இலட்சத்து 45 ஆயிரம் ரூபாய் பணம் பறித்ததாக பொலன்னறுவை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் தெஹியத்தகண்டிய பிரதேசத்தில் வசிக்கும் 23 மற்றும் 29 வயதுடையவர்கள் ஆவர். 

சந்தேக நபர்கள் இருவரும், குறித்த தேரரை தாக்கி நிர்வாணமாக்கி அதனை காணொளிகளாக எடுத்து சமூக ஊடகங்களில் பதிவிடுவதாகக் கூறி, தேரரை மிரட்டி சுமார் ஒரு வருட காலமாக பணம் பறித்து வந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மோட்டார் சைக்கிள், கையடக்கத் தொலைபேசி மற்றும் வங்கிக் கணக்கு புத்தகம் என்பன சந்தேக நபர்களிடமிருந்து பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலன்னறுவை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர்  மேற்கொண்டு வருகின்றனர்.

தேரரை மிரட்டி ஒரு வருடமாக பணம் பறித்த இளைஞர்கள் கைது பொலன்னறுவை - திம்புலாகல பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் பணிபுரியும் தேரர் ஒருவரை மிரட்டி பணம் பறித்த இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த இளைஞர்கள் தேரரை மிரட்டி  03 இலட்சத்து 45 ஆயிரம் ரூபாய் பணம் பறித்ததாக பொலன்னறுவை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் தெரிவித்தனர்.கைது செய்யப்பட்டவர்கள் தெஹியத்தகண்டிய பிரதேசத்தில் வசிக்கும் 23 மற்றும் 29 வயதுடையவர்கள் ஆவர். சந்தேக நபர்கள் இருவரும், குறித்த தேரரை தாக்கி நிர்வாணமாக்கி அதனை காணொளிகளாக எடுத்து சமூக ஊடகங்களில் பதிவிடுவதாகக் கூறி, தேரரை மிரட்டி சுமார் ஒரு வருட காலமாக பணம் பறித்து வந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.மோட்டார் சைக்கிள், கையடக்கத் தொலைபேசி மற்றும் வங்கிக் கணக்கு புத்தகம் என்பன சந்தேக நபர்களிடமிருந்து பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலன்னறுவை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர்  மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement