• Apr 22 2025

Thansita / Apr 22nd 2025, 6:19 pm
image

குருணாகல் தம்புள்ள வீதியில் இன்றையதினம் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் காயமடைந்துள்ளதாக தொரட்டியாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்

தம்புள்ளையிலிருந்து குருணாகல் நோக்கிப் பயணித்த லொறி ஒன்று குருணாகலில் இருந்து தம்புள்ளை நோக்கிப் பயணித்த லொறியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது, தம்புள்ளையிலிருந்து குருணாகல் நோக்கிப் பயணித்த லொறியில் இருந்த இளைஞன் ஒருவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார்  தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்

குருநாகல் விபத்தில் இளைஞன் பலி குருணாகல் தம்புள்ள வீதியில் இன்றையதினம் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் காயமடைந்துள்ளதாக தொரட்டியாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்தம்புள்ளையிலிருந்து குருணாகல் நோக்கிப் பயணித்த லொறி ஒன்று குருணாகலில் இருந்து தம்புள்ளை நோக்கிப் பயணித்த லொறியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.விபத்தின் போது, தம்புள்ளையிலிருந்து குருணாகல் நோக்கிப் பயணித்த லொறியில் இருந்த இளைஞன் ஒருவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார்  தெரிவித்துள்ளனர்.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்

Advertisement

Advertisement

Advertisement