• Jun 30 2024

லொறியுடன் மோதிய மோட்டார் சைக்கிள் - இளைஞன் ஸ்தலத்திலேயே பலி

Chithra / Jun 28th 2024, 11:33 am
image

Advertisement

 

ஹங்வெல்ல - வனஹகொட பிரதேசத்தில் ஹைலெவல் வீதியில் இன்று (28) காலை இடம்பெற்ற லொறி மற்றும் மோட்டார் சைக்கிள் விபத்தில் 18 வயதுடைய இளைஞன் ஒருவன் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.

அவிசாவளை நோக்கி சென்றி லொறியின் எரிபொருள் தீர்ந்த நிலையில் வீதியோரம் நிறுத்தப்பட்டிருந்த போது, ​​வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் லொறியின் பின்பகுதியில் மோதியுள்ளது.

மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற ஹங்வெல்ல, கிராம்புல பிரதேசத்தைச் சேர்ந்த ஜனித் பிரியதர்ஷன என்ற இளைஞனே விபத்தில் உயிரிழந்துள்ளான்.

சம்பவம் தொடர்பில் லொறியின் சாரதி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதுடன் ஹங்வெல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

லொறியுடன் மோதிய மோட்டார் சைக்கிள் - இளைஞன் ஸ்தலத்திலேயே பலி  ஹங்வெல்ல - வனஹகொட பிரதேசத்தில் ஹைலெவல் வீதியில் இன்று (28) காலை இடம்பெற்ற லொறி மற்றும் மோட்டார் சைக்கிள் விபத்தில் 18 வயதுடைய இளைஞன் ஒருவன் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.அவிசாவளை நோக்கி சென்றி லொறியின் எரிபொருள் தீர்ந்த நிலையில் வீதியோரம் நிறுத்தப்பட்டிருந்த போது, ​​வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் லொறியின் பின்பகுதியில் மோதியுள்ளது.மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற ஹங்வெல்ல, கிராம்புல பிரதேசத்தைச் சேர்ந்த ஜனித் பிரியதர்ஷன என்ற இளைஞனே விபத்தில் உயிரிழந்துள்ளான்.சம்பவம் தொடர்பில் லொறியின் சாரதி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதுடன் ஹங்வெல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement