• Jan 23 2025

மல்வத்து ஓயாவில் நீராடச் சென்ற இளைஞனுக்கு ஏற்பட்ட துயரம் - தேடும் பணி தீவிரம்

Chithra / Jan 15th 2025, 9:35 am
image

 

மடு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குஞ்சுக்குளம் பிரதேசத்தில் மல்வத்து ஓயாவில் நீராடச் சென்ற இளைஞர் ஒருவர் கடந்த திங்கட்கிழமை (13) மாலை நீரில் மூழ்கி காணாமல் போயுள்ள நிலையில் குறித்த இளைஞரை தேடும் நடவடிக்கை தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.

சம்பவத்தில் 23 வயதுடைய புஸ்ஸல்லாவ பகுதியைச் சேர்ந்த ஒருவரே காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸார் மற்றும் அப்பிரதேச மக்கள் இணைந்து தேடிய போதும் நேற்று   மாலை வரை குறித்த இளைஞன் மீட்கப்படவில்லை.

குறித்த இளைஞன் காணாமல் போனமை குறித்து  மடு பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டைத் தொடர்ந்து,  குறித்த இளைஞன் நீராடச் சென்ற பகுதிக்குச் சென்ற பொலிஸார் மற்றும் அப்பிரதேச மக்கள் தேடுதல்களை மேற்கொண்டனர்.

மேற்படி நபர் கடந்த திங்கட்கிழமை (13)  ஐந்து பேருடன் மடு தேவாலயத்திற்கு சென்றுவிட்டு மல்வத்து ஓயாவில் நீராடச் சென்ற போதே நீரில் மூழ்கி மாயமானதாக தெரிவிக்கப்படுகிறது.


மல்வத்து ஓயாவில் நீராடச் சென்ற இளைஞனுக்கு ஏற்பட்ட துயரம் - தேடும் பணி தீவிரம்  மடு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குஞ்சுக்குளம் பிரதேசத்தில் மல்வத்து ஓயாவில் நீராடச் சென்ற இளைஞர் ஒருவர் கடந்த திங்கட்கிழமை (13) மாலை நீரில் மூழ்கி காணாமல் போயுள்ள நிலையில் குறித்த இளைஞரை தேடும் நடவடிக்கை தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.சம்பவத்தில் 23 வயதுடைய புஸ்ஸல்லாவ பகுதியைச் சேர்ந்த ஒருவரே காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.பொலிஸார் மற்றும் அப்பிரதேச மக்கள் இணைந்து தேடிய போதும் நேற்று   மாலை வரை குறித்த இளைஞன் மீட்கப்படவில்லை.குறித்த இளைஞன் காணாமல் போனமை குறித்து  மடு பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டைத் தொடர்ந்து,  குறித்த இளைஞன் நீராடச் சென்ற பகுதிக்குச் சென்ற பொலிஸார் மற்றும் அப்பிரதேச மக்கள் தேடுதல்களை மேற்கொண்டனர்.மேற்படி நபர் கடந்த திங்கட்கிழமை (13)  ஐந்து பேருடன் மடு தேவாலயத்திற்கு சென்றுவிட்டு மல்வத்து ஓயாவில் நீராடச் சென்ற போதே நீரில் மூழ்கி மாயமானதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement