• May 17 2024

அச்சுறுத்தும் ஜிகா வைரஸ் : மக்களே எச்சரிக்கை!

Tamil nila / Dec 15th 2022, 11:30 am
image

Advertisement

கர்நாடகாவில் புதிதாக ஜிகா வைரஸ் ஏற்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கர்நாடகாவில் ஐந்தே வயதான சிறுமி ஒருவருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கர்நாடகாவில் ஜிகா வைரஸ் பாதிப்பு கண்டறிவது இதுவே முதல்முறை.


கடந்த டிச.12ஆம் திகதி அந்தக் குழந்தைக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு உறுதியானது. இதனால் மக்கள், குழந்தைகள், கர்பிணி பெண்கள் அனைவரையும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றது.



ஜிகா வைரஸ் தற்போதுள்ள நிலைமையைக் கண்காணித்து வருவதாகவும் என்ன நடந்தாலும் அதைச் சமாளிக்க தயாராக உள்ளதாகவும் அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் சுதாகர் தெரிவித்துள்ளார். சரி, அந்த ஜிகா வைரஸ் என்றால் என்ன? அது எப்படிப் பரவும்? அறிகுறிகள் மற்றும் சிகிச்சை முறை என்ன என்பதை விரிவாகப் பார்க்கலாம்.


 ஜிகா வைரஸ் முதல்முறையாகக் கடந்த 2016ஆம் ஆண்டு பிரேசில் நாட்டில் திடீரென பரவ தொடங்கியது. அப்போது முதலே ஜிகா வைரஸை ஆய்வாளர்கள் கவனத்துடனேயே பார்க்கிறார்கள். எப்படிப் பரவுகிறது Aedes Aegypti என்ற வகை கொசுவால் தான் இந்த வைரஸ் பரவுகிறது. ஜிகா வைரஸ் பாதிக்கப்பட்ட கொசு மனிதர்களைக் கடிக்கும் போது, ஜிகா வைரஸ் மனிதர்களுக்கும் பரவுகிறது. 


டெங்கு, சிக்குன்குனியா மற்றும் மஞ்சள் காய்ச்சலைப் பரப்புவதும் இதே வகை கொசுக்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது. ஜிகா வைரஸை பரப்பும் இந்த கொசு ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் பசிபிக் தீவுகளின் பல்வேறு பகுதிகளில் காணப்படுகிறது. 


அறிகுறிகள் ஜிகா வைரஸ் ஒருவருக்கு ஏற்பட்டால் சில முக்கிய அறிகுறிகள் மூலம் அதை நாம் கண்டுபிடிக்கலாம். முதலில் காய்ச்சல், சொறி, வெண்படல அழற்சி, கண்கள் சிவத்தல் மற்றும் தசை வலி ஏற்படும். உலகெங்கிலும் உள்ள மருத்துவர்கள் உடலின் நோயெதிர்ப்பு அமைப்பு நரம்புகளைத் தாக்கும் குய்லின்-பாரே போன்ற நரம்பியல் கோளாறுகளும் இந்த ஜிகா வைரசால் ஏற்படுமா என்பது குறித்தும் ஆய்வு செய்து வருகின்றனர். பிரேசிலில் புதிதாகப் பிறந்த சில குழந்தைகளின் தலை வழக்கத்தை விட சிறியதாக இருந்தது. இது மைக்ரோசெபாலி என்று அழைக்கப்படும்.


 இதற்கும் ஜிகா வைரசுக்கும் எதாவது தொடர்பு இருக்கிறதா என்பது குறித்தும் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. சிகிச்சை முறை அது சரி ஜிகா வைரசைக் குணப்படுத்த முடியுமா? என்று கேட்கிறீர்களா.. உண்மையில் இதுவரை ஜிகா வைரஸுக்கு குறிப்பிட்ட சிகிச்சை என்று தனியாக எதுவும் இல்லை. ஜிகா வைரஸுக்கும் தடுப்பூசி இல்லை. இருப்பினும், பெரும்பாலான கேஸ்கள் லேசாகவே இருக்கும்.. இருப்பினும், உங்களுக்கு அறிகுறிகள் இருந்தால், தலைவலி, தசை அல்லது மூட்டு வலிக்குத் தேவைப்படும் தெரபி மருந்துகளை எடுத்துக் கொள்ளலாம். 


மூளை உள்ளிட்ட பகுதிகள் இதனால் பாதிக்கப்படுகிறது என்பது குறித்த உறுதியான தகவல்கள் இல்லை. குழந்தைகள் ஜாக்கிரதை ஜிகா வைரஸ் பாதிப்பால் உயிரிழப்புகள் ஏற்படுமா? என்ற கேள்விக்கு சிம்பிளாக பதில் சொல்வது கடினம். ஜிகா வைரஸ் லேசான பாதிப்புகள் ஏற்படுத்தும் என்றாலும் கூட சில நேரங்களில் உயிரிழப்புகள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. பிறக்கும் போது ஜிகா பாதிப்புடன் பிறக்கும் குழந்தைகள் உயிரிழக்க வாய்ப்புகள் உள்ளது. மூன்று வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு ஜிகா பாதிப்பு ஏற்பட்டால், அவை தானாக இரண்டு முதல் ஏழு நாட்களுக்குள் குணமாகும். 


சில அரிய சூழல்களில், உடல்நிலை சிக்கலாக மாறும் போது உயிரிழப்புகள் ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளன. தவிர்ப்பது எப்படி ஜிகா வைரஸால் பாதிக்கப்படுவதில் இருந்து தவிர்க்கச் சிறந்த வழி, கொசுக்கடியில் இருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்வது தான். பொதுவாக மாலை அல்லது அதிகாலை நேரத்தில் தான் கொசுக்கள் அதிகம் இருக்கும். கொசுவலை, பாதுகாப்பான ஆடை, கொசுவர்த்தி உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தி நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ளலாம். ஜிகா வைரஸை ஆர்டி-பிசிஆர் உதவியுடன் கண்டறிய முடியும். இருப்பினும், சில நேரங்களில் இதிலும் கூட அது தப்பிக்க வாய்ப்புள்ளது. அதுபோன்ற சூழலில் மருத்துவர்களிடம் உடனடியாக நாம் செல்ல வேண்டும்.


அச்சுறுத்தும் ஜிகா வைரஸ் : மக்களே எச்சரிக்கை கர்நாடகாவில் புதிதாக ஜிகா வைரஸ் ஏற்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கர்நாடகாவில் ஐந்தே வயதான சிறுமி ஒருவருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கர்நாடகாவில் ஜிகா வைரஸ் பாதிப்பு கண்டறிவது இதுவே முதல்முறை.கடந்த டிச.12ஆம் திகதி அந்தக் குழந்தைக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு உறுதியானது. இதனால் மக்கள், குழந்தைகள், கர்பிணி பெண்கள் அனைவரையும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றது.ஜிகா வைரஸ் தற்போதுள்ள நிலைமையைக் கண்காணித்து வருவதாகவும் என்ன நடந்தாலும் அதைச் சமாளிக்க தயாராக உள்ளதாகவும் அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் சுதாகர் தெரிவித்துள்ளார். சரி, அந்த ஜிகா வைரஸ் என்றால் என்ன அது எப்படிப் பரவும் அறிகுறிகள் மற்றும் சிகிச்சை முறை என்ன என்பதை விரிவாகப் பார்க்கலாம். ஜிகா வைரஸ் முதல்முறையாகக் கடந்த 2016ஆம் ஆண்டு பிரேசில் நாட்டில் திடீரென பரவ தொடங்கியது. அப்போது முதலே ஜிகா வைரஸை ஆய்வாளர்கள் கவனத்துடனேயே பார்க்கிறார்கள். எப்படிப் பரவுகிறது Aedes Aegypti என்ற வகை கொசுவால் தான் இந்த வைரஸ் பரவுகிறது. ஜிகா வைரஸ் பாதிக்கப்பட்ட கொசு மனிதர்களைக் கடிக்கும் போது, ஜிகா வைரஸ் மனிதர்களுக்கும் பரவுகிறது. டெங்கு, சிக்குன்குனியா மற்றும் மஞ்சள் காய்ச்சலைப் பரப்புவதும் இதே வகை கொசுக்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது. ஜிகா வைரஸை பரப்பும் இந்த கொசு ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் பசிபிக் தீவுகளின் பல்வேறு பகுதிகளில் காணப்படுகிறது. அறிகுறிகள் ஜிகா வைரஸ் ஒருவருக்கு ஏற்பட்டால் சில முக்கிய அறிகுறிகள் மூலம் அதை நாம் கண்டுபிடிக்கலாம். முதலில் காய்ச்சல், சொறி, வெண்படல அழற்சி, கண்கள் சிவத்தல் மற்றும் தசை வலி ஏற்படும். உலகெங்கிலும் உள்ள மருத்துவர்கள் உடலின் நோயெதிர்ப்பு அமைப்பு நரம்புகளைத் தாக்கும் குய்லின்-பாரே போன்ற நரம்பியல் கோளாறுகளும் இந்த ஜிகா வைரசால் ஏற்படுமா என்பது குறித்தும் ஆய்வு செய்து வருகின்றனர். பிரேசிலில் புதிதாகப் பிறந்த சில குழந்தைகளின் தலை வழக்கத்தை விட சிறியதாக இருந்தது. இது மைக்ரோசெபாலி என்று அழைக்கப்படும். இதற்கும் ஜிகா வைரசுக்கும் எதாவது தொடர்பு இருக்கிறதா என்பது குறித்தும் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. சிகிச்சை முறை அது சரி ஜிகா வைரசைக் குணப்படுத்த முடியுமா என்று கேட்கிறீர்களா. உண்மையில் இதுவரை ஜிகா வைரஸுக்கு குறிப்பிட்ட சிகிச்சை என்று தனியாக எதுவும் இல்லை. ஜிகா வைரஸுக்கும் தடுப்பூசி இல்லை. இருப்பினும், பெரும்பாலான கேஸ்கள் லேசாகவே இருக்கும். இருப்பினும், உங்களுக்கு அறிகுறிகள் இருந்தால், தலைவலி, தசை அல்லது மூட்டு வலிக்குத் தேவைப்படும் தெரபி மருந்துகளை எடுத்துக் கொள்ளலாம். மூளை உள்ளிட்ட பகுதிகள் இதனால் பாதிக்கப்படுகிறது என்பது குறித்த உறுதியான தகவல்கள் இல்லை. குழந்தைகள் ஜாக்கிரதை ஜிகா வைரஸ் பாதிப்பால் உயிரிழப்புகள் ஏற்படுமா என்ற கேள்விக்கு சிம்பிளாக பதில் சொல்வது கடினம். ஜிகா வைரஸ் லேசான பாதிப்புகள் ஏற்படுத்தும் என்றாலும் கூட சில நேரங்களில் உயிரிழப்புகள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. பிறக்கும் போது ஜிகா பாதிப்புடன் பிறக்கும் குழந்தைகள் உயிரிழக்க வாய்ப்புகள் உள்ளது. மூன்று வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு ஜிகா பாதிப்பு ஏற்பட்டால், அவை தானாக இரண்டு முதல் ஏழு நாட்களுக்குள் குணமாகும். சில அரிய சூழல்களில், உடல்நிலை சிக்கலாக மாறும் போது உயிரிழப்புகள் ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளன. தவிர்ப்பது எப்படி ஜிகா வைரஸால் பாதிக்கப்படுவதில் இருந்து தவிர்க்கச் சிறந்த வழி, கொசுக்கடியில் இருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்வது தான். பொதுவாக மாலை அல்லது அதிகாலை நேரத்தில் தான் கொசுக்கள் அதிகம் இருக்கும். கொசுவலை, பாதுகாப்பான ஆடை, கொசுவர்த்தி உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தி நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ளலாம். ஜிகா வைரஸை ஆர்டி-பிசிஆர் உதவியுடன் கண்டறிய முடியும். இருப்பினும், சில நேரங்களில் இதிலும் கூட அது தப்பிக்க வாய்ப்புள்ளது. அதுபோன்ற சூழலில் மருத்துவர்களிடம் உடனடியாக நாம் செல்ல வேண்டும்.

Advertisement

Advertisement

Advertisement