• Sep 21 2024

இந்திய பிரதமர் இலங்கைக்கு வருகை- 10 புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்படவுள்ளது- விமல் வீரவன்ச தெரிவிப்பு!

Tamil nila / Aug 1st 2024, 8:34 pm
image

Advertisement

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இம்மாதம் இலங்கை வரவுள்ளார் எனவும், இதன்போது 10 புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்படவுள்ளது எனவும் எமக்கு தகவல் கிடைத்துள்ளது. 

இந்த முயற்சியை தோற்கடிப்பதற்கு அனைவரும் அணிதிரள வேண்டும் – என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச அழைப்பு விடுத்துள்ளார்.

சர்வஜன அதிகாரத்தால் கொழும்பில் நடத்தப்பட்ட ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். 

இது தொடர்பில் விமல் வீரவன்ச மேலும் கூறியவை வருமாறு,

“ ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலேயே அனைவரினதும் கவனம் திரும்பியுள்ளது. எனவே, எவரும் அவதானம் செலுத்தாத, இலங்கையின் தலைவிதியை நிர்ணயிக்ககூடிய விடயமொன்று தொடர்பில் நாம் தெளிவுபடுத்தவுள்ளோம்.

இற்றைக்கு சில வாரங்களுக்கு முன்னர் இந்திய வெளிவிவகார அமைச்சர் இரு நாட்கள் பயணமாக இலங்கை வந்திருந்தார். இது வெளிப்படையான விஜயம். இதன்போது அவர் இராஜதந்திர சந்திப்புகளில் ஈடுபட்டிருந்தார். இதன்போது பேசப்பட்ட விடயங்கள் தொடர்பில் பகிரங்கப்படுத்தப்படாவிட்டாலும் வழமைபோல் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கை என்றே விளக்கம் கொடுக்கப்பட்டது.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஜெய்சங்கர் இலங்கைக்கு திடீரென வந்து சென்றுள்ளார் என எமக்கு தகவல் கிடைத்துள்ளது. குறுகிய கால பயணமாக வந்துள்ள அவர் ஜனாதிபதியை சந்தித்தும் பேச்சு நடத்தியுள்ளார்.

இரு நாடுகளுக்கும் தாக்கம் செலுத்தக்கூடிய விடயங்கள் தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்பட்ட பின்னர் அவர் இந்தியா சென்றுள்ளார். இந்த விடயங்கள் ஊடகங்களில் வெளியாகவில்லை. அரசியல் களத்திலும் பேசப்படவில்லை. எமக்கு தகவல் கிடைக்கும் தரப்புகளில் இருந்து இந்த தகவல்கள் கிடைக்கப்பெற்றன.

ஜுலை மாதமே இந்திய பிரதமர் மோடி இலங்கை வரவிருந்தார், எனினும், ஜெய்சங்கரின் திடீர் பயணத்தின் பின்னர், அடுத்த மாதத்துக்குள் இந்திய பிரதமரின் இலங்கை விஜயம் அமையவுள்ளது.

மோடியின் கொழும்பு பயணம் தொடர்பில் இந்திய இராஜதந்திர மட்டத்திலும் இரு கருத்துகள் நிலவுகின்றன. இலங்கையில் தேர்தல் நடப்பதால் கொழும்பு செல்லக்கூடாது என ஒரு தரப்பு கூறியுள்ளது.

10 புரிந்துணர்வு உடன்படிக்கைகள் தொடர்பில் ஜெய்சங்கர் இணக்கப்பாட்டை எட்டியுள்ளார். இதில் கையொப்பமிடுவதற்காகவே இந்திய பிரதமர் மோடி இலங்கை வருகின்றார்.   இலங்கை வருவதற்குரிய சாத்தியம் அதிகம் உள்ளது.

பூகோல இணைப்பு இலங்கையில் உள்ள பலாலி விமான நிலையம் உட்பட விமான நிலையங்களை இந்திய நிறுவனங்களின்கீழ் கொண்டுவருதல், இந்திய நாணய பயன்பாடு, மின் இணைப்பு,  எரிபொருள் இணைப்பு, சுங்கப்பிரிவு இணைப்பு, திரைப்பட இணைப்பு என்பனவை மையப்படுத்தியே புரிந்துணர்வு உடன்படிக்கைகள் அமைந்துள்ளன.

மோடி அடுத்த மாதம் இலங்கைக்கு வந்து மேற்படி ஒப்பந்தங்கள் கைச்சாத்திப்பட்டால் அவற்றில் இருந்து விடுபடுவது கடினம். எனவே, இவற்றை தடுப்பதற்கு அனைத்து சக்திகளும் முன்வர வேண்டும். ஜனாதிபதி தேர்தலைவிட இதற்கே முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும். 10 புரிந்துணர்வு உடன்படிக்கைகள்மூலம் இலங்கையின் கழுத்தை இறுக்குவதற்கு இடமளிக்க முடியாது.

மேலும் ஜனாதிபதி தேர்தலை விட இதனை தோற்கடிப்பதற்கே சர்வஜன அதிகாரம் முக்கியத்துவம் வழங்கும்.  இது தொடர்பில் மகாசங்கத்தினரும் அவதானம் செலுத்தி, உரிய நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டும்.” – என்றார்.


இந்திய பிரதமர் இலங்கைக்கு வருகை- 10 புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்படவுள்ளது- விமல் வீரவன்ச தெரிவிப்பு இந்திய பிரதமர் நரேந்திர மோடி இம்மாதம் இலங்கை வரவுள்ளார் எனவும், இதன்போது 10 புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்படவுள்ளது எனவும் எமக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த முயற்சியை தோற்கடிப்பதற்கு அனைவரும் அணிதிரள வேண்டும் – என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச அழைப்பு விடுத்துள்ளார்.சர்வஜன அதிகாரத்தால் கொழும்பில் நடத்தப்பட்ட ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் விமல் வீரவன்ச மேலும் கூறியவை வருமாறு,“ ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலேயே அனைவரினதும் கவனம் திரும்பியுள்ளது. எனவே, எவரும் அவதானம் செலுத்தாத, இலங்கையின் தலைவிதியை நிர்ணயிக்ககூடிய விடயமொன்று தொடர்பில் நாம் தெளிவுபடுத்தவுள்ளோம்.இற்றைக்கு சில வாரங்களுக்கு முன்னர் இந்திய வெளிவிவகார அமைச்சர் இரு நாட்கள் பயணமாக இலங்கை வந்திருந்தார். இது வெளிப்படையான விஜயம். இதன்போது அவர் இராஜதந்திர சந்திப்புகளில் ஈடுபட்டிருந்தார். இதன்போது பேசப்பட்ட விடயங்கள் தொடர்பில் பகிரங்கப்படுத்தப்படாவிட்டாலும் வழமைபோல் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கை என்றே விளக்கம் கொடுக்கப்பட்டது.இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஜெய்சங்கர் இலங்கைக்கு திடீரென வந்து சென்றுள்ளார் என எமக்கு தகவல் கிடைத்துள்ளது. குறுகிய கால பயணமாக வந்துள்ள அவர் ஜனாதிபதியை சந்தித்தும் பேச்சு நடத்தியுள்ளார்.இரு நாடுகளுக்கும் தாக்கம் செலுத்தக்கூடிய விடயங்கள் தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்பட்ட பின்னர் அவர் இந்தியா சென்றுள்ளார். இந்த விடயங்கள் ஊடகங்களில் வெளியாகவில்லை. அரசியல் களத்திலும் பேசப்படவில்லை. எமக்கு தகவல் கிடைக்கும் தரப்புகளில் இருந்து இந்த தகவல்கள் கிடைக்கப்பெற்றன.ஜுலை மாதமே இந்திய பிரதமர் மோடி இலங்கை வரவிருந்தார், எனினும், ஜெய்சங்கரின் திடீர் பயணத்தின் பின்னர், அடுத்த மாதத்துக்குள் இந்திய பிரதமரின் இலங்கை விஜயம் அமையவுள்ளது.மோடியின் கொழும்பு பயணம் தொடர்பில் இந்திய இராஜதந்திர மட்டத்திலும் இரு கருத்துகள் நிலவுகின்றன. இலங்கையில் தேர்தல் நடப்பதால் கொழும்பு செல்லக்கூடாது என ஒரு தரப்பு கூறியுள்ளது.10 புரிந்துணர்வு உடன்படிக்கைகள் தொடர்பில் ஜெய்சங்கர் இணக்கப்பாட்டை எட்டியுள்ளார். இதில் கையொப்பமிடுவதற்காகவே இந்திய பிரதமர் மோடி இலங்கை வருகின்றார்.   இலங்கை வருவதற்குரிய சாத்தியம் அதிகம் உள்ளது.பூகோல இணைப்பு இலங்கையில் உள்ள பலாலி விமான நிலையம் உட்பட விமான நிலையங்களை இந்திய நிறுவனங்களின்கீழ் கொண்டுவருதல், இந்திய நாணய பயன்பாடு, மின் இணைப்பு,  எரிபொருள் இணைப்பு, சுங்கப்பிரிவு இணைப்பு, திரைப்பட இணைப்பு என்பனவை மையப்படுத்தியே புரிந்துணர்வு உடன்படிக்கைகள் அமைந்துள்ளன.மோடி அடுத்த மாதம் இலங்கைக்கு வந்து மேற்படி ஒப்பந்தங்கள் கைச்சாத்திப்பட்டால் அவற்றில் இருந்து விடுபடுவது கடினம். எனவே, இவற்றை தடுப்பதற்கு அனைத்து சக்திகளும் முன்வர வேண்டும். ஜனாதிபதி தேர்தலைவிட இதற்கே முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும். 10 புரிந்துணர்வு உடன்படிக்கைகள்மூலம் இலங்கையின் கழுத்தை இறுக்குவதற்கு இடமளிக்க முடியாது.மேலும் ஜனாதிபதி தேர்தலை விட இதனை தோற்கடிப்பதற்கே சர்வஜன அதிகாரம் முக்கியத்துவம் வழங்கும்.  இது தொடர்பில் மகாசங்கத்தினரும் அவதானம் செலுத்தி, உரிய நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டும்.” – என்றார்.

Advertisement

Advertisement

Advertisement