உத்தர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் புதிதாக அமைக்கப்பட்ட ராமர் கோயில் கும்பாபிஷேகம் எதிர்வரும் 22ம் திகதி நடைபெறவுள்ளது.
1,800 கோடி ரூபாயில் மிகவும் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலில் கும்பாபிஷேகத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட நாட்டின் முக்கிய பிரமுகர்களும் அரசியல் தலைவர்களுக்கும் பங்குபற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறானதொரு நிலையில், ராமர் கோயிலில் நடைபெறும் கும்பாபிஷேக நிகழ்வில் பயன்படுத்துவதற்காக விசேடமாக 108 அடி நீள ஊதுபத்தி தயாரிக்கப்பட்டுள்ளது.
குஜராத் மாநிலம் வதோ தராவில் தயாரிக்கப்பட்ட இந்த ஊதுபத்தி 3,610 கிலோ எடையும் 108 அடி நீளமும் மூன்றரை அடி அகலமும் கொண்டது.
இந்த ஊதுபத்தி பற்ற வைத்தால் 50 கிலோமீற்றர் தூரத்திற்கு வாசனை பரவும் என்றும் ஒன்றரை மாதங்களுக்கு தொடர்ந்து எரிந்து வாசனையை அளிக்கும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் குறித்த ஊதுபத்தியை வதோதராவில் இருந்து அயோத்திக்கு கொண்டு செல்வதற்காக பிரம்மாண்ட பாரவூர்தி வடிவமைக்கப்பட்டு அதில் ஏற்றப்பட்டு அயோத்திக்கு கொண்டுவரப்பட்ட நிலையில் நேற்றையதினம் அயோத்தி ராமர் கோவில் 108 அடி ஊதுபத்தி ஏற்றப்பட்டதுடன் அயோத்தி நகரமெங்கும் ஊதுபத்தி நறுமணம் பரவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு 108 அடி நீளத்தில் ஊதுபத்தி தயாரிப்பு.samugammedia உத்தர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் புதிதாக அமைக்கப்பட்ட ராமர் கோயில் கும்பாபிஷேகம் எதிர்வரும் 22ம் திகதி நடைபெறவுள்ளது.1,800 கோடி ரூபாயில் மிகவும் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலில் கும்பாபிஷேகத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட நாட்டின் முக்கிய பிரமுகர்களும் அரசியல் தலைவர்களுக்கும் பங்குபற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இவ்வாறானதொரு நிலையில், ராமர் கோயிலில் நடைபெறும் கும்பாபிஷேக நிகழ்வில் பயன்படுத்துவதற்காக விசேடமாக 108 அடி நீள ஊதுபத்தி தயாரிக்கப்பட்டுள்ளது.குஜராத் மாநிலம் வதோ தராவில் தயாரிக்கப்பட்ட இந்த ஊதுபத்தி 3,610 கிலோ எடையும் 108 அடி நீளமும் மூன்றரை அடி அகலமும் கொண்டது.இந்த ஊதுபத்தி பற்ற வைத்தால் 50 கிலோமீற்றர் தூரத்திற்கு வாசனை பரவும் என்றும் ஒன்றரை மாதங்களுக்கு தொடர்ந்து எரிந்து வாசனையை அளிக்கும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.இந்நிலையில் குறித்த ஊதுபத்தியை வதோதராவில் இருந்து அயோத்திக்கு கொண்டு செல்வதற்காக பிரம்மாண்ட பாரவூர்தி வடிவமைக்கப்பட்டு அதில் ஏற்றப்பட்டு அயோத்திக்கு கொண்டுவரப்பட்ட நிலையில் நேற்றையதினம் அயோத்தி ராமர் கோவில் 108 அடி ஊதுபத்தி ஏற்றப்பட்டதுடன் அயோத்தி நகரமெங்கும் ஊதுபத்தி நறுமணம் பரவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.