• Nov 19 2024

எல்லைத்தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட 11 இந்திய கடற்றொழிலாளர்களுக்கு விளக்கமறியல்!

Tamil nila / Aug 24th 2024, 7:11 pm
image

எல்லையை தாண்டி மீன்பிடியில் ஈடிபட்ட 11 இந்திய கடற்றொழிலாளர்களை  இலங்கையின் கடற்படையினர் நேற்றிரவு கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட 11 மீனவர்களும் பருத்தித்துறை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது அவர்கள் 11 பேரையும் எதிர்வரும் 06.09.2024 வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

இலங்கை வடக்கு பருத்தித்துறை கடல் பகுதியில் வைத்தே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இதன்போது நாகப்பட்டிணத்தை சேர்ந்த 11 பேருடன், அவர்கள் பயணித்த விசை படகு ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

ஏற்கனவே கடந்த சில மாதங்களாக தமிழக கடற்றொழிலாளர்கள் தொடர்ந்தும் இலங்கையின் கடற்படையினரால் கைது செய்யப்படும் சம்பவங்கள் பதிவாகி வருகின்றது

அத்துடன் அண்மைக்காலத்தில் இந்திய கடற்றொழிலாளர்களை கைது செய்யும் நடவடிக்கையின்போது ஒரு இலங்கை கடற்படை உறுப்பினரும், இரண்டு இந்திய கடற்றொழிலாளர்களும் பலியான சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

எல்லைத்தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட 11 இந்திய கடற்றொழிலாளர்களுக்கு விளக்கமறியல் எல்லையை தாண்டி மீன்பிடியில் ஈடிபட்ட 11 இந்திய கடற்றொழிலாளர்களை  இலங்கையின் கடற்படையினர் நேற்றிரவு கைது செய்துள்ளனர்.இவ்வாறு கைது செய்யப்பட்ட 11 மீனவர்களும் பருத்தித்துறை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது அவர்கள் 11 பேரையும் எதிர்வரும் 06.09.2024 வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.இலங்கை வடக்கு பருத்தித்துறை கடல் பகுதியில் வைத்தே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இதன்போது நாகப்பட்டிணத்தை சேர்ந்த 11 பேருடன், அவர்கள் பயணித்த விசை படகு ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.ஏற்கனவே கடந்த சில மாதங்களாக தமிழக கடற்றொழிலாளர்கள் தொடர்ந்தும் இலங்கையின் கடற்படையினரால் கைது செய்யப்படும் சம்பவங்கள் பதிவாகி வருகின்றதுஅத்துடன் அண்மைக்காலத்தில் இந்திய கடற்றொழிலாளர்களை கைது செய்யும் நடவடிக்கையின்போது ஒரு இலங்கை கடற்படை உறுப்பினரும், இரண்டு இந்திய கடற்றொழிலாளர்களும் பலியான சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement