• May 06 2025

மட்டக்களப்பில் வாக்களிப்பு தினத்தில் மாத்திரம் 139 விதிமீறல்

Chithra / May 6th 2025, 3:30 pm
image

  

மட்டக்களப்பு மாவட்டத்தில் வாக்களிப்பு தினத்தில்  மாத்திரம் 139 விதிமீறல் சம்பவங்களும் வாகரையில் ஒரு தேர்தல் வன்முறை சம்பவம் பதிவாகியுள்ளதாக மாவட்ட அரச அதிபர் ஜேஜே, முரளிதரன் தெரிவித்துள்ளார்.

ஊடக சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்.

மட்டக்களப்பு 12 உள்ளூராட்சி சபைகளுக்கான பிரதிநிதிகளை தெரிவு செய்கின்ற தேர்தலில் பொதுமக்கள் மிக ஆர்வத்துடனும் அமைதியான முறையில் வாக்களித்து வருகின்றனர்.

வாக்களிப்பு நேரம் முடிவடைந்த பின்னர் பொதுமக்கள் மிகவும் அமைதியான முறையில் வீடுகளில் தங்கி இருக்க வேண்டும்.

பிற்பகல் 4.30 மணிக்கு பிறகு 144 தெரிவு செய்யப்பட்டுள்ள வாக்கெண்ணும் நிலையங்களில் தபால் மூல வாக்குகளும் அதன் பின்பு பொதுமக்களின் வட்டார வாக்குகளும் எண்ணப்பட உள்ளன.

மட்டக்களப்பில் வாக்களிப்பு தினத்தில் மாத்திரம் 139 விதிமீறல்   மட்டக்களப்பு மாவட்டத்தில் வாக்களிப்பு தினத்தில்  மாத்திரம் 139 விதிமீறல் சம்பவங்களும் வாகரையில் ஒரு தேர்தல் வன்முறை சம்பவம் பதிவாகியுள்ளதாக மாவட்ட அரச அதிபர் ஜேஜே, முரளிதரன் தெரிவித்துள்ளார்.ஊடக சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்.மட்டக்களப்பு 12 உள்ளூராட்சி சபைகளுக்கான பிரதிநிதிகளை தெரிவு செய்கின்ற தேர்தலில் பொதுமக்கள் மிக ஆர்வத்துடனும் அமைதியான முறையில் வாக்களித்து வருகின்றனர்.வாக்களிப்பு நேரம் முடிவடைந்த பின்னர் பொதுமக்கள் மிகவும் அமைதியான முறையில் வீடுகளில் தங்கி இருக்க வேண்டும்.பிற்பகல் 4.30 மணிக்கு பிறகு 144 தெரிவு செய்யப்பட்டுள்ள வாக்கெண்ணும் நிலையங்களில் தபால் மூல வாக்குகளும் அதன் பின்பு பொதுமக்களின் வட்டார வாக்குகளும் எண்ணப்பட உள்ளன.

Advertisement

Advertisement

Advertisement