• Sep 20 2024

நைஜீரியா படகு விபத்து : 15 சிறுவர்கள் உயிரிழப்பு! samugammedia

Tamil nila / May 10th 2023, 8:10 pm
image

Advertisement

நைஜீரியா நாட்டின் வடமேற்கு மாநிலம் சொகோடோ அருகே படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் சிக்கி 15  குழந்தைகள் உயிரிழந்துள்ளதுடன், பலர் மாயமாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சொகோடோ அருகே இருக்கும் பகுதி ஒன்றில் விறகு சேகரிக்க 20-க்கும் மேற்பட்டோர் படகில் கிளம்பியுள்ளனர். படகில் சிறுவர்  குழுந்தைகள் உள்ளிட்டோரும் பயணம் செய்துள்ளனர்.

இந்நிலையில், குறித்த படகு ஆற்றின் நடுவே சென்றுக்கொண்டிருந்த போது கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் 13 சிறுமிகள், 2 சிறுவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

அதேநேரம் பெருமளவிலானோர் காணாமல் போயுள்ள நிலையில், உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்றும் அஞ்சப்படுகிறது.

மீட்பு பணியாளர்கள் களப்பணிகளில் ஈடுபட்டுள்ளதுடன், இந்த சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.


நைஜீரியா படகு விபத்து : 15 சிறுவர்கள் உயிரிழப்பு samugammedia நைஜீரியா நாட்டின் வடமேற்கு மாநிலம் சொகோடோ அருகே படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் சிக்கி 15  குழந்தைகள் உயிரிழந்துள்ளதுடன், பலர் மாயமாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.சொகோடோ அருகே இருக்கும் பகுதி ஒன்றில் விறகு சேகரிக்க 20-க்கும் மேற்பட்டோர் படகில் கிளம்பியுள்ளனர். படகில் சிறுவர்  குழுந்தைகள் உள்ளிட்டோரும் பயணம் செய்துள்ளனர்.இந்நிலையில், குறித்த படகு ஆற்றின் நடுவே சென்றுக்கொண்டிருந்த போது கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் 13 சிறுமிகள், 2 சிறுவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.அதேநேரம் பெருமளவிலானோர் காணாமல் போயுள்ள நிலையில், உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்றும் அஞ்சப்படுகிறது.மீட்பு பணியாளர்கள் களப்பணிகளில் ஈடுபட்டுள்ளதுடன், இந்த சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement