• Oct 28 2024

தலைமன்னார் கடற்பரப்பில் 2 படகுகளுடன் 15 இந்திய மீனவர்கள் கைது! samugammedia

Chithra / Oct 15th 2023, 9:43 am
image

Advertisement

 

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 15 இந்திய மீனவர்கள் நேற்று சனிக்கிழமை (14) மாலை தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

2 டோலர் படகுகளில் எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்பில் நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில்  தலைமன்னார் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட 15 இந்திய மீனவர்களும் தலைமன்னார் கடற்படை முகாமிற்கு கொண்டு வரப்பட்ட நிலையில் நேற்று இரவு தலைமன்னார் கடற்படை முகாமில் வைத்து குறித்த மீனவர்கள் அனைவரும் மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளின் பின்னர் தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

குறித்த  15 இந்திய மீனவர்களும் தற்போது தலைமன்னார் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

விசாரணைகளின் பின்னர் தலை மன்னார் பொலிஸார் குறித்த மீனவர்களை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

தலைமன்னார் கடற்பரப்பில் 2 படகுகளுடன் 15 இந்திய மீனவர்கள் கைது samugammedia  இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 15 இந்திய மீனவர்கள் நேற்று சனிக்கிழமை (14) மாலை தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.2 டோலர் படகுகளில் எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்பில் நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில்  தலைமன்னார் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.கைது செய்யப்பட்ட 15 இந்திய மீனவர்களும் தலைமன்னார் கடற்படை முகாமிற்கு கொண்டு வரப்பட்ட நிலையில் நேற்று இரவு தலைமன்னார் கடற்படை முகாமில் வைத்து குறித்த மீனவர்கள் அனைவரும் மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளின் பின்னர் தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.குறித்த  15 இந்திய மீனவர்களும் தற்போது தலைமன்னார் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.விசாரணைகளின் பின்னர் தலை மன்னார் பொலிஸார் குறித்த மீனவர்களை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement