வரகாபொல – அல்கம பகுதியில் கட்டு துவக்கு வெடித்ததில் சிறுமி ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று (19) இரவு இந்த சம்பவம் பதிவாகியுள்ளதாக வரக்காபொல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவத்தில் வரகாபொல பகுதியைச் சேர்ந்த 15 வயதான சிறுமி ஒருவரே காயமடைந்துள்ளதுடன், அவர் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன்,
துப்பாக்கி பொலிஸாரின் காவலில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வரக்காபொல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
துப்பாக்கி வெடித்ததில் காயமடைந்த 15 வயதான சிறுமி. ஒருவர் கைது. வரகாபொல – அல்கம பகுதியில் கட்டு துவக்கு வெடித்ததில் சிறுமி ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.நேற்று (19) இரவு இந்த சம்பவம் பதிவாகியுள்ளதாக வரக்காபொல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.சம்பவத்தில் வரகாபொல பகுதியைச் சேர்ந்த 15 வயதான சிறுமி ஒருவரே காயமடைந்துள்ளதுடன், அவர் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந்த சம்பவத்துடன் தொடர்புடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், துப்பாக்கி பொலிஸாரின் காவலில் வைக்கப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வரக்காபொல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.