• Feb 03 2025

சுதந்திர தின பாதுகாப்புக்காக 1650 பொலிஸார் பணியில்

Chithra / Feb 2nd 2025, 7:58 am
image

 

77ஆவது சுதந்திர தின விழா மற்றும் ஒத்திகை நடவடிக்கைகளின் போது, ​​பாதுகாப்புப் பணிகளுக்காக பொலிஸ் மற்றும் பொலிஸ் சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகள் 1,650 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

போக்குவரத்துக்கோ அல்லது பொதுமக்களுக்கோ இடையூறு ஏற்படாத வகையில் ஒத்திகை மற்றும் நிகழ்வை எளிதாக்கும் வகையில் சிறப்பு போக்குவரத்து திட்டமும் நடைமுறையில் உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, சுதந்திர தின கொண்டாட்ட ஒத்திகைக்கு தயாராகும் வகையில், கொழும்பு சுதந்திர சதுக்கத்தை அண்மித்த பகுதியில் இன்று சிறப்பு போக்குவரத்து திட்டம் செயல்படுத்தப்படும்.

இந்த நேரத்தில் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் பொதுமக்களுக்கு அறிவுறுத்துகிறது.

சுதந்திர தின பாதுகாப்புக்காக 1650 பொலிஸார் பணியில்  77ஆவது சுதந்திர தின விழா மற்றும் ஒத்திகை நடவடிக்கைகளின் போது, ​​பாதுகாப்புப் பணிகளுக்காக பொலிஸ் மற்றும் பொலிஸ் சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகள் 1,650 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.போக்குவரத்துக்கோ அல்லது பொதுமக்களுக்கோ இடையூறு ஏற்படாத வகையில் ஒத்திகை மற்றும் நிகழ்வை எளிதாக்கும் வகையில் சிறப்பு போக்குவரத்து திட்டமும் நடைமுறையில் உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.அதன்படி, சுதந்திர தின கொண்டாட்ட ஒத்திகைக்கு தயாராகும் வகையில், கொழும்பு சுதந்திர சதுக்கத்தை அண்மித்த பகுதியில் இன்று சிறப்பு போக்குவரத்து திட்டம் செயல்படுத்தப்படும்.இந்த நேரத்தில் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் பொதுமக்களுக்கு அறிவுறுத்துகிறது.

Advertisement

Advertisement

Advertisement