• May 03 2024

காதலியின் தாயை டிக்டொக் மூலம் அச்சுறுத்திய 17 வயது காதலன்! பின்னணியில் வெளியான காரணம் samugammedia

Chithra / Mar 27th 2023, 10:34 pm
image

Advertisement


மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்தில் 17 வயது சிறுமி  ஒருவரின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த சிறுமியின் தாயாருக்கு சிறுமியின் காதலனும் அவனின் நண்பனும் வாள் மற்றும் கூரிய ஆயுதங்களுடன் தொலைபேசி டிக் டொக் மூலம் அச்சுறுத்தல் விடுத்ததையடுத்து  இருவரையும் (25) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பாடசாலை ஒன்றில் கல்வி கற்றுவரும் சிறுமியை அதே தரத்தில் கல்வி கற்றுவரும் சிறுவன் ஒருவன் காதலித்து வந்துள்ளார். 


இதனையறிந்த சிறுமியின் தாயார் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து 17 வயதுடைய காதலனும் அவனது நண்பனும் சேர்ந்து வாள், கூரிய ஆயுதத்துடன் படம் எடுத்து அதற்கு வீரம் கொண்ட பாடல்களை பதிவு செய்து கையடக்க தொலைபேசியில் டிக் டொக்கில் பதிவிட்டு சிறுமியின் தாயாரை அச்சுறுத்தியுள்ளனர்.

இதனையடுத்து சிறுமியின் தாயார் செய்த முறைப்பாட்டையடுத்து சம்பவ தினமான சனிக்கிழமை காலையில் 17 வயதுடைய இருவரையும பொலிஸார் கைது செய்து விசாரணையின் பின்னர் வாக்கு மூலம் பதிவு செய்து எச்சரித்து மாலையில் விடுவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


காதலியின் தாயை டிக்டொக் மூலம் அச்சுறுத்திய 17 வயது காதலன் பின்னணியில் வெளியான காரணம் samugammedia மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்தில் 17 வயது சிறுமி  ஒருவரின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த சிறுமியின் தாயாருக்கு சிறுமியின் காதலனும் அவனின் நண்பனும் வாள் மற்றும் கூரிய ஆயுதங்களுடன் தொலைபேசி டிக் டொக் மூலம் அச்சுறுத்தல் விடுத்ததையடுத்து  இருவரையும் (25) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.பாடசாலை ஒன்றில் கல்வி கற்றுவரும் சிறுமியை அதே தரத்தில் கல்வி கற்றுவரும் சிறுவன் ஒருவன் காதலித்து வந்துள்ளார். இதனையறிந்த சிறுமியின் தாயார் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து 17 வயதுடைய காதலனும் அவனது நண்பனும் சேர்ந்து வாள், கூரிய ஆயுதத்துடன் படம் எடுத்து அதற்கு வீரம் கொண்ட பாடல்களை பதிவு செய்து கையடக்க தொலைபேசியில் டிக் டொக்கில் பதிவிட்டு சிறுமியின் தாயாரை அச்சுறுத்தியுள்ளனர்.இதனையடுத்து சிறுமியின் தாயார் செய்த முறைப்பாட்டையடுத்து சம்பவ தினமான சனிக்கிழமை காலையில் 17 வயதுடைய இருவரையும பொலிஸார் கைது செய்து விசாரணையின் பின்னர் வாக்கு மூலம் பதிவு செய்து எச்சரித்து மாலையில் விடுவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement