• Oct 02 2024

ஆதிலிங்கேஸ்வரர் விக்கிரங்களை தூக்கி எறிந்தமை எந்த ஒரு பிரஜையாலும் ஏற்றுக்கொள்ள முடியாது! சிறிரெலோ உதயராசா samugammedia

Chithra / Mar 27th 2023, 10:23 pm
image

Advertisement

வவுனியா வடக்கு, ஒலுமடு, வெடுக்குநாறி மலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலய சிவலிங்கம் உள்ளிட்ட விக்கிரங்களை உடைத்து தூக்கி எறிந்தமை எந்தவொரு பிரஜையாலும் ஏற்றுக் கொள்ள முடியாத செயல் என சிறிரெலோ கட்சியின் செயலாளர் நாயகம் ப.உதயராசா தெரிவித்துள்ளார்.

வவுனியா, ஓலுமடு, வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலய விக்கிரகங்கள் உடைக்கப்பட்டமை தொடர்பில் சிறிரெலோ கட்சியின் செயலாளர் நாயகம் ப.உதயராசா வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கைத் தீவானது பல்லின, பல்மத கலாசாரங்களைக் கொண்ட நாடு. இந்த நாட்டில் அனைத்து மக்களும் ஒன்றினைந்து நாட்டை கட்டியெழுப்புவதாக இருந்தால் இன, மத, மொழி ரீதியிலான பிரச்சனைகள் தீர்க்கப்பட வேண்டும் என்பதுடன், ஒருவரின் இன, மத, மொழி அடையாளங்களையும், அவர்களது நம்பிக்கைகளையும் மற்றவர்கள் மதிக்க வேண்டும்.

எந்தவொரு மதமும் இன்னொரு மதத்தை நிந்தனை செய். இன்னொரு மதத்தை அழிக்க வேண்டும் என போதிக்கவில்லை. 

அந்த வகையில் தமிழ் மக்களின் வழிபாட்டுடன் தொடர்புடைய ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் விக்கிரங்கள் உடைத்து வீசப்பட்மையை ஏற்றுக் கொள்ள முடியாது. இது தொடர்பில் அரசாங்கமும், பொலிசாரும், தொல்லியல் திணைக்களமும் இதய சுத்தியுடன் செயற்பட்டு இச் செயலுக்கு காரணமானவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.

அத்துடன் சைவ மக்களின் வாழிபாட்டு உரிமை மீள அப்பகுதியில் உறுதி செய்யப்பட வேண்டும் என  நாட்டின் ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையிலான அரசாங்கத்திடம் கோருகின்றேன்.

குறித்த மிலேசத்தனமான செயலை கண்டித்து எதிர்வரும் வியாழக்கிழமை வவுனியாவில் நடைபெறும் மக்கள் போராட்டத்திற்கு எனது கட்சியின் பூரண ஆதரவை வழக்குவதுடன், அனைத்து தரப்பினரும் இன, மத, மொழி, கட்சி பேதமின்றி ஒன்றிணைய வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கின்றேன் என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


ஆதிலிங்கேஸ்வரர் விக்கிரங்களை தூக்கி எறிந்தமை எந்த ஒரு பிரஜையாலும் ஏற்றுக்கொள்ள முடியாது சிறிரெலோ உதயராசா samugammedia வவுனியா வடக்கு, ஒலுமடு, வெடுக்குநாறி மலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலய சிவலிங்கம் உள்ளிட்ட விக்கிரங்களை உடைத்து தூக்கி எறிந்தமை எந்தவொரு பிரஜையாலும் ஏற்றுக் கொள்ள முடியாத செயல் என சிறிரெலோ கட்சியின் செயலாளர் நாயகம் ப.உதயராசா தெரிவித்துள்ளார்.வவுனியா, ஓலுமடு, வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலய விக்கிரகங்கள் உடைக்கப்பட்டமை தொடர்பில் சிறிரெலோ கட்சியின் செயலாளர் நாயகம் ப.உதயராசா வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,இலங்கைத் தீவானது பல்லின, பல்மத கலாசாரங்களைக் கொண்ட நாடு. இந்த நாட்டில் அனைத்து மக்களும் ஒன்றினைந்து நாட்டை கட்டியெழுப்புவதாக இருந்தால் இன, மத, மொழி ரீதியிலான பிரச்சனைகள் தீர்க்கப்பட வேண்டும் என்பதுடன், ஒருவரின் இன, மத, மொழி அடையாளங்களையும், அவர்களது நம்பிக்கைகளையும் மற்றவர்கள் மதிக்க வேண்டும்.எந்தவொரு மதமும் இன்னொரு மதத்தை நிந்தனை செய். இன்னொரு மதத்தை அழிக்க வேண்டும் என போதிக்கவில்லை. அந்த வகையில் தமிழ் மக்களின் வழிபாட்டுடன் தொடர்புடைய ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் விக்கிரங்கள் உடைத்து வீசப்பட்மையை ஏற்றுக் கொள்ள முடியாது. இது தொடர்பில் அரசாங்கமும், பொலிசாரும், தொல்லியல் திணைக்களமும் இதய சுத்தியுடன் செயற்பட்டு இச் செயலுக்கு காரணமானவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.அத்துடன் சைவ மக்களின் வாழிபாட்டு உரிமை மீள அப்பகுதியில் உறுதி செய்யப்பட வேண்டும் என  நாட்டின் ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையிலான அரசாங்கத்திடம் கோருகின்றேன்.குறித்த மிலேசத்தனமான செயலை கண்டித்து எதிர்வரும் வியாழக்கிழமை வவுனியாவில் நடைபெறும் மக்கள் போராட்டத்திற்கு எனது கட்சியின் பூரண ஆதரவை வழக்குவதுடன், அனைத்து தரப்பினரும் இன, மத, மொழி, கட்சி பேதமின்றி ஒன்றிணைய வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கின்றேன் என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement